ரிலீசுக்கு பிறகும் சர்ச்சையில் சிக்கிய 'மாநாடு'!

சிம்பு மற்றும் வெங்கட்பிரபு கூட்டணியில் உருவாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் படம் 'மாநாடு'. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 27, 2021, 10:14 PM IST
ரிலீசுக்கு பிறகும் சர்ச்சையில் சிக்கிய 'மாநாடு'! title=

சிம்பு மற்றும் வெங்கட்பிரபு கூட்டணியில் உருவாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் படம் 'மாநாடு'.  அதிகப்படியான நேர்மறை விமர்சனங்களை பெற்ற இப்படம், ரிலீஸ் ஆவதில் நிறைய சிக்கல்களை சந்தித்தது.

ALSO READ அரசியில் கட்சி தலைவர்களை சீண்டியதா மாநாடு திரைப்படம்?

ஒரு வழியாக அனைத்து போராட்டங்களையும் கடந்து இந்த படம் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் இப்படத்தின் காட்சி குறித்து ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.  பொதுவாக திரைப்படங்களிலும் அல்லது சீரியல்களிலும் போதைப்பொருள் பயன்படுத்தும் காட்சி வந்தால் திரையில் அதற்கான வார்னிங்காக "மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது" போன்ற வசனங்கள் போடப்படும்.  

sjsruy

ஆனால் இந்தப்படத்தில் அத்தகைய வசனம் இல்லை என்று புது சர்ச்சை கிளம்பியுள்ளது.  மாநாடு படம் குறித்து 'TOBACCO CONTROL' என்கிற அமைப்பு தமிழக சுகாதாரத்துறையிடம் புகார் ஒன்றை அளித்துள்ளது.  அதாவது மாநாடு திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இடம்பெறும் காட்சி ஒன்றில் புகைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்.  அப்போது நிச்சயம் திரையில் "புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு" என்ற வசனம் இடம்பெற வேண்டும்.  ஆனால் இப்படத்தில் அதுபோன்ற எச்சரிக்கை வசனம் எதுவும் இடம்பெறவில்லை.

maanadu

மேலும் யூடியூபில் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர்களிலும் எஸ்.ஜே.சூர்யா புகைபிடிக்கும் காட்சியை காட்டும்போதும் இதுபோன்ற எச்சரிக்கை வசனங்கள் எதுவும் இடம்பெறவில்லை.  இது சிறுவர்களையும், இளைஞர்களையும் போதை பொருளை பயன்படுத்த தூண்டும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இது மிகவும் கண்டிக்கத்தக்கது" என்று தமிழக சுகாதாரத்துறை இடம் 'TOBACCO CONTROL' அமைப்பு புகார் அளித்துள்ளது.

ALSO READ மாநாடு படத்தின் 2 நாள் வசூல் விவரங்களை வெளியிட்ட தயாரிப்பாளர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR 

Trending News