கமல் வழக்கை விசாரிக்க இடைக்கால தடை - மதுரை ஐகோர்ட்

Last Updated : May 4, 2017, 05:23 PM IST
கமல் வழக்கை விசாரிக்க இடைக்கால தடை - மதுரை ஐகோர்ட் title=

நடிகர் கமலஹாசன் மீதான வழக்கை விசாரிக்க மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்து உத்தரவிட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு நடிகர் கமல்ஹாசன் சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர், மகாபாரதம் பற்றி சில கருத்துகளை கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிநாதசுந்தரம் என்பவர் மகாபாரதம் பற்றி தவறான கருத்துகளை கூறியதால் நடிகர் கமல்ஹாசனுக்கு அபராதத்துடன் கூடிய அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கூறி கமல் மீது வள்ளியூர் கோர்ட்டில் ஒருவர் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனுவை விசாரித்த வள்ளியூர் நீதிமன்றம் வரும் 5-ம் தேதி நடிகர் கமல்ஹாசன் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தன் மீதான வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரியும், வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும் நடிகர் கமலஹாசன் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றறை தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த கோர்ட் வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதிப்பதுடன், அவர் வள்ளியூர் கோர்ட்டில் ஆஜராக தேவையில்லை என்றும் உத்தரவிட்டனர்.

Trending News