பாலா சார் அப்படி எதுவுமே செய்யவில்லை.. நடிகை மமிதா பைஜூ விளக்கம்

Actress Mamitha Baiju Statement On Bala : நடிகை மமிதா பைஜூ சமீப காலமாக பரவி வரும் சர்ச்சை பற்றி விளக்கம் அளித்து போஸ்ட் ஒன்றை தனது இனஸ்டாகிராம் பக்கத்தில் பார்த்துள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 1, 2024, 03:49 PM IST
  • பாலா, கடந்த சில மாதங்களாக இயக்கி வரும் படம், வணங்கான்.
  • அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார்.
  • இந்த படத்தில் மலையாள நாயகி ஒருவர் நடித்து வந்தார்.
பாலா சார் அப்படி எதுவுமே செய்யவில்லை.. நடிகை மமிதா பைஜூ விளக்கம் title=

Premalu Actress Mamitha Baiju New Statement About Vanangaan Director Bala : நடிகை மமிதா பைஜூ சமீப காலமாக பரவி வரும் சர்ச்சை பற்றி விளக்கம் அளித்து போஸ்ட் ஒன்றை தனது இனஸ்டாகிராம் பக்கத்தில் பார்த்துள்ளார். இதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.

 வணங்கான் திரைப்படம்:
 சுமார் 24 வருடங்களுக்கும் மேலாக, தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குனராக இருப்பவர், பாலா. இவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் வெற்றி பெறுகிறதோ இல்லையோ, கண்டிப்பாக பார்ப்பவர்களின் மனங்களை பாதித்து விடும். அந்த அளவிற்கு ஆழமான, அழுத்தமான கதைகளை தருவதற்கு பெயர் போனவர் இவர். பாலா, கடந்த சில மாதங்களாக இயக்கி வரும் படம், வணங்கான். இந்த படத்தில் தற்போது அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் மலையாள நாயகி ஒருவர் நடித்து வந்தார். அப்போது படப்பிடிப்பின் போது பாலாவுடன் ஏற்பட்ட அனுபவத்தை பற்றி அந்த நடிகை பகிர்ந்த தகவல் வைரலாகந்து. எனினும் இந்த தகவல் உண்மையா அல்லது வெறும் வதந்தியா என்று தெரியவில்லை. 

மேலும் படிக்க | Guess Who? முகத்தை பாஸ்போர்ட்டால் மறைத்த நாயகி! யாரென்று தெரிகிறதா? 

நாயகியை அடித்த பாலா? 
வணங்கான் படத்தில் மலையாள நடிகை மமிதா பைஜூ நடித்திருந்தார். இவர், கேரளாவில் பெரிதும் ஹிட் ஆன நாயகி ஆவார். தற்போது வெளியாகி தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மலையாள படம்,‘பிரேமலு’. இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்து தற்போது தமிழ் ரசிகர்கள் மனங்களை பரவலாக கவர்ந்து வருகிறார். 

நடிகை மமிதா பைஜூ, வணங்கான் படத்திலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் தான் கலந்து கொண்ட நேர்காணலில் இயக்குனர் பாலாவின் படத்தில் நடித்த அனுபவம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது, மேளம் அடித்துக்கொண்டே பாடுவது போல ஒரு காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. அதில் எப்படி நடிப்பது என தனக்கு சரியாக தெரியவில்லை என்றும், அதை படம் பிடிக்க ஆரம்பித்த போது 3 டேக் ஆனதாகவும், அருகில் இருந்து ஒருவர் கற்றுக்கொடுத்தும் தனக்கு அது வரவில்லை, அப்போது இயக்குனர் பாலா தனது முதுகில் கோபமாக தட்டியதாகவும் அவர் அந்த நேர்காணலில் கூறியதாக தகவல் வெளியானது. மேலும் நடிகர் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகியதால் தான் தானும் விலகினேன் என்று கூறியதாக கூறப்படுகிறது. இந்த செய்தி உண்மையா அல்லது வதந்தியா என்று தெரியாமல் இணையத்தில் தகவல் தீயாய் பரவியது.

நடிகை மமிதா பைஜூ விளக்கம்:
இந்நிலையில் தற்போது சர்ச்சையை கிளப்பி வரும் இந்த செய்து குறித்து நடிகை மமிதா பைஜூ விளக்கம் ஒன்றை கொடுத்து இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது.,

அனைவருக்கும் வணக்கம். வணங்கான் திரைப்படத்தில் எனது ஈடுபாடு குறித்து பரப்பப்படும் செய்தி முற்றிலும் ஆதாரமற்றவை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஒரு நேர்காணலில் இருந்து எடுக்கப்பட்ட தவறான மற்றும் பொறுப்பற்ற செய்தி வெளியாகி பரப்பப்பட்டது. ஒரு வருடத்திற்கு மேல் பாலா சாருடன் நாம் பணியாற்றி இருக்கிறேன். சிறந்த நடிகையாக மாற்ற அவர் பாடுபட்டுள்ளார். அந்தப் படத்தில் நான் பணிபுரிந்தபோது மனரீதியாகவோ அல்லது உடல்ரீதியாகவோ எந்த விதமான துன்புறுத்தலையும் நான் அனுபவிக்கவில்லை என்று தெளிவாக கூற விரும்புகிறேன். பாலா சார் ஷூட்டிங்கில் ஸ்ட்ரிக்ட் தான், அது அவரது ஒர்கிங் ஸ்டைல், பாலா சார் என்னிடம் ரொம்ப கடுமையாக எல்லாம் நடந்துகொள்ளவில்லை எனவும் அவர் விளக்கம் கொடுத்து இருக்கிறார். 

மேலும் படிக்க | ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ உண்மை கதை என்ன? குணா குகையில் அப்படி என்னதான் நடந்தது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News