Naai sekar returns: நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா

Naai sekar returns box office collection: நாய் சேகர் படத்தில் நாய்களை திருடி விற்பனை செய்பவராக வடிவேலு நடித்துள்ளார். இந்த படத்தில் சூப்பர் சிங்கர் சிவாங்கி, ரெடின் கிங்க்ஸ்லி ஆகியோரும் நடித்துள்ளனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 11, 2022, 01:06 PM IST
  • நாய் சேகர் ரிட்டனஸ் படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கியுள்ளார்.
  • நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் வசூல் எவ்வளவு.
 Naai sekar returns: நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா title=

வடிவேலு தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா கலைஞன். பல ஆண்டுகள் தமிழ் சினிமாவை ஆட்சி செய்த வடிவேலு சில பிரச்னைகளால் திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். ஒருவழியாக அவருக்குரிய பஞ்சாயத்துக்கள் அனைத்து முடிந்ததை அடுத்து மீண்டும் வைகை புயல் களமிறங்கியிருக்கிறது. அந்தவகையில் மாரி செல்வராஜின் மாமன்னன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் அவர் ஜிவி பிரகாஷின் படத்தில் வில்லனாக நடிக்கவிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. இதனால் வடிவேலுவை மீண்டும் திரையில் காணவிருப்பதை நினைத்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் காமெடி, குணச்சித்திரம் மட்டுமின்றி ஹீரோவாகவும் களமிறங்குகிறார் வடிவேலு. அந்தவகையில், தலைநகரம், மருதமலை என எவர்க்ரீன் காமெடிகளை வடிவேலுவிடமிருந்து வாங்கிய சுராஜ் வடிவேலுவை வைத்து "நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்" படத்தை இயக்கியிருக்கிறார்.  நாய் சேகர் படத்தில் நாய்களை திருடி விற்பனை செய்பவராக வடிவேலு நடித்துள்ளார். இப்படத்தில் வடிவேலுவுடன் இணைந்து ஆனந்த் ராஜ், ஷிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் சந்தோஷ் நாராயணன் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

லண்டனுக்கு பறந்த வடிவேலு; வைரலாகும் புகைப்படம்!

மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜா, விக்ரமா... மாதவன் எடுத்திருக்கும் முடிவு... உண்மை என்ன?

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அந்த வகையில் நேற்றைய தினம் இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்களின் மிக நீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை குவித்து வருகிறது. மேலும் படத்தில் காமெடி எதுவும் வொர்க் அவுட் ஆகவில்லை என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மீண்டும் வைகை புயல்... நாய் சேகர் வடிவேலு டிசம்பரில் ரிட்டர்ன்ஸ்

இந்த நிலையில் தற்போது படம் வெளியான முதல் நாளில் ரூ.1 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புயலால் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ப்ரோமோஷனுக்காக இப்படி செய்வதா? நடிகையின் காலில் இயக்குனர் செய்த செயல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News