Oscars 2023: இந்தாண்டு ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படங்கள் என்னென்ன?

Oscars 2023 India Movies In Nominations: ஆஸ்கார் 2023 விருது விழா இந்திய நேரப்படி நாளை அதிகாலை நடைபெற உள்ள நிலையில், பல்வேறு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்திய திரைப்படங்கள் குறித்து இதில் காணலாம்.   

Written by - Sudharsan G | Last Updated : Mar 12, 2023, 05:23 PM IST
  • ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்பப்படுகிறது.
  • அந்த பாட்டிற்கு அமெரிக்க நடிகை நடனமாட உள்ளார்.
  • நிகழ்ச்சியை டிஎஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக காணலாம்.
Oscars 2023: இந்தாண்டு ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படங்கள் என்னென்ன? title=

Oscars 2023 India Movies In Nominations: ஆஸ்கார் விருது என்பது திரையுலகில் மிக உயரிய விருதாக கருதப்படுகிறது. அகாடமி விருதுகள் என்றும் இது அழைக்கப்படும் நிலையில், 95ஆவது ஆஸ்கார் விருது விழா மார்ச் 12ஆம் தேதி (அமெரிக்க நேரப்படி) மாலை, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற உள்ளது. இது உலகம் முழுக்க நேரடியாக ஒளிபரப்பாக உள்ள நிலையில், இந்திய நேரப்படி நாளை (மார்ச் 15) அதிகாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. 

இந்தியாவில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 95ஆவது ஆஸ்கார் விருது விழா ஒளிபரப்பாக உள்ளது. மிகவும் பிரசித்தி வாய்ந்த சிவப்பு கம்பள வரவேற்பை பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த வரவேற்பில் சர்வதேச அளவில் இருந்து திரைக்கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள், பிரபலங்கள் கலந்துகொள்வார்கள்.

மேலும் படிக்க | Oscars 2023: இதுவரை அதிக ஆஸ்கார் வென்ற நடிகை யார் தெரியுமா?

தமிழர்களுக்கு ஆஸ்கார் என்றாலே ஏ.ஆர். ரஹ்மான்தான் நியாபகத்திற்கு வருவார். அவர் 'Slumdog Millionarie' இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற பிறகே, அவருக்கான சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது எனலாம். அந்த அளவிற்கு, ஆஸ்கார் விருது மிக உயரியதாக கருதப்படுகிறது. இவ்விருதின் மீது ஆயிரம் குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் இருந்தாலும், இந்த விருதை வெல்வதும் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. பாலிவுட், கோலிவுட் என இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் இவ்விருதை வெல்வதை கனவாகவும் சுமந்து வருகின்றனர். 

இந்நிலையில், இம்முறையும் சில இந்திய படங்கள் ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதுகுறித்து விவரங்களை இங்கே காணலாம். 

1. நாட்டு நாட்டு பாடல் - ஆர்ஆர்ஆர்

ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைகளின் போது இந்தியா முழுவதும் ஹிட் அடித்த வரலாற்று ஆக்ஷன் படமான ஆர்ஆர்ஆர் நிறைய சலசலப்பை உருவாக்கியது. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய இப்படம் சர்வதேச அளவில் பெரும் புகழைப் பெற்றது. மேலும் ஆர்ஆர்ஆர் பாடலான "நாட்டு நாட்டு" பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் தற்போது ஆஸ்கார் அரங்கில் களமிறங்க தயாராக உள்ளது.

இப்படத்தின் பாடல் மேடையிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும். இதில், அமெரிக்க நடிகரும் நடனக் கலைஞருமான லாரன் கோட்லீப் (Lauren Gottlieb) தற்போது ஆஸ்கார் விருது விழாவில் நாட்டு நாட்டுக்கு நடனமாடப் போவதாக அறிவித்துள்ளார். 

2. ஆல் தட் ப்ரீத்ஸ் - All that Breathes

"ஆல் தட் ப்ரீத்ஸ்" திரைப்படம் சிறந்த ஆவணப்படத் திரைப்படம் என்ற பிரிவில் அகாடமி விருதுக்கான இறுதிப் போட்டிக்கு வந்தது. ஷௌனக் சென் இயக்கிய குஜராத்தி மொழிப்படம் இது.

ஆல் தி பியூட்டி அண்ட் தி பிளட் ஷெட் (All the Beauty and the Blood Shed), ஃபயர் ஆஃப் லவ் (Fire of Love), எ ஹவுஸ் மேட் ஆஃப் ஸ்ப்ளிண்டர்ஸ் (A House Made of Splinters) மற்றும் நவல்னி (Navalny) ஆகிய படங்களுக்கு போட்டியாக இந்த படம் இருக்கும்.

3. தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் - The Elephant Whisperers

ஆஸ்கார் விருதுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பிடித்த மூன்றாவது இந்தியத் திரைப்படம் 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்'. Netflix தளத்தில் உள்ள இந்த திரைப்படம் சிறந்த ஆவணப்பட குறும்படம் என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது. கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கிய இந்த ஆவணப்படம், தமிழ்நாட்டில் கைவிடப்பட்ட இரண்டு யானைகளும் அவற்றின் காவலர்களும் எவ்வாறு பிரிக்க முடியாத பிணைப்பை உருவாக்குகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. Haulout, How Do You Measure a Year?, The Martha Mitchell Effect, Stranger at the Gate ஆகிய ஆவணப்படங்களும் இதே பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 

மேலும் படிக்க | Oscars 2023: 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஓட்டு போட்டாரா சூர்யா...?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News