வெங்கட்பிரபு குழு சிங்கப்பூரில் "பார்ட்டி"

Last Updated : Jul 19, 2017, 02:01 PM IST
வெங்கட்பிரபு குழு சிங்கப்பூரில் "பார்ட்டி" title=

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் 'பார்ட்டி' படத்தின் படப்பிடிப்பு பிஜி தீவுகளில் தொடங்கப்படவுள்ளது.

'இதன் படப்பூஜை சென்னையில் கடந்த ஜூலை 12-ம் தேதி நடைபெற்றது. தொடர்ச்சியாக 52 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி மொத்த படத்தையும் முடிக்க திட்டமிட்டுள்ளார்கள்.

பிரேம்ஜி இசையமைப்பாளராக பணிபுரியவுள்ள இப்படத்துக்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ப்ரவீன் கே.எல் எடிட்டிங் பணிகளை கவனிக்கவுள்ளார்.

இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், நாசர், சம்பத், ஜெய், மிர்ச்சி சிவா, சந்திரன், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, 
சஞ்சிதா ஷெட்டி மற்றும் நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் படபிடிப்பு தற்போது பிஜி தீவுகளில் துவங்கப்பட்டது.

Trending News