தல பொங்கல்: தமிழகம் முழுவதும் விற்று தீர்ந்த அஜித்-தின் விஸ்வாசம்

எந்த ஏரியாவில் யார் "விஸ்வாசம்" படத்தின் உரிமையை வாங்கியுள்ளார்கள் என்ற பட்டியலை படக்குழு வெளியிட்டது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 22, 2018, 11:27 AM IST
தல பொங்கல்: தமிழகம் முழுவதும் விற்று தீர்ந்த அஜித்-தின் விஸ்வாசம் title=

சிவா இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா நடிக்க, டி இமான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'விஸ்வாசம்'. ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு இசை டி.இமான். விஸ்வாசம் படத்தின் பாடல்கள் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது. இத்திரைப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் ‘அட்ச்சி தூக்கு’ கடந்த 10 ஆம் தேதி வெளியானது. இமான் பாடிய இப்பாடல் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்பாடலை தொடர்ந்து அடுத்தடுத்து பாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டனர்.

இந்த படம் பொங்கலுக்கு வெளிவர உள்ளது. அதே தினத்தில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் "பேட்ட" படமும் திரைக்கு வருகிறது. மிகப்பெரிய இரண்டு படங்கள் வெளிவர உள்ளதால், திரையரங்கு மற்றும் விநியோக உரிமை போன்றவற்றில் பிரச்சனை ஏற்ப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 

 

இந்தநிலையில், அஜித் நடிக்கும் "விஸ்வாசம்" படம் தமிழ்நாடு முழுவதும் விற்கப்பட்டு உள்ளது. எந்த ஏரியாவில் யார் "விஸ்வாசம்" படத்தின் உரிமையை வாங்கியுள்ளார்கள் என்ற பட்டியலை படக்குழு வெளியிட்டது. ஆனால் எத்தனை திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதைக் குறித்து இன்னும் அறிவிக்கல்வில்லை.

Trending News