Anandha Kannan Death: பிரபல தொகுப்பாளரும், நடிகருமான ஆனந்த கண்ணன் திடீர் மரணம்

மிகவும் பிரபலமான தொகுப்பாளராக இருந்த விஜே ஆனந்த கண்ணன் நேற்று இரவு காலமானார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 17, 2021, 09:39 AM IST
Anandha Kannan Death: பிரபல தொகுப்பாளரும், நடிகருமான ஆனந்த கண்ணன் திடீர் மரணம் title=

தமிழ்நாட்டு 90ஸ் கிட்ஸை கவர்ந்த டிவி தொகுப்பாளர்களில் ஒருவர் ஆனந்த கண்ணன். அப்போது இவருக்கு பெரிய அளவில் ரசிகர்களும் இருந்தார்கள். ஆனந்த கண்ணன் சிந்துபாத் உள்ளிட்ட சில சீரியல்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார்.

2012ம் ஆண்டு வெளியான அதிசய உலகம் 3டி படத்தின் மூலம் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்தார் ஆனந்த கண்ணன் (Anandha Kannan). அந்த படத்தைத் தொடர்ந்து ஆனந்த கண்ணன் விஜே பிரஜன் உடன் முள்ளும் மலரும் எனும் படத்தில் இணைந்து நடித்து இருந்தார். ஆனால், அந்த படம் திரைக்கு வரவில்லை. அதன் பிறகு அவர் நடிப்பில் உருவான இத்தனை நாளாய் எங்கிருந்தாய் படமும் வெளியாகவில்லை.

ALSO READ | சார்பட்டா படக்குழுவிடம் விளக்கம் கேட்டு அதிமுக சார்பில் நோட்டீஸ்

இந்நிலையில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆனந்த கண்ணன் தற்போது நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அது அவரது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனந்த கண்ணன் மறைவிற்கு ரசிகர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றர்.

இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர், சிறந்த நண்பன், சிறந்த மனிதன் தற்போது இல்லை. அவருக்கு என்னுடைய ஆழந்த இரங்கல் என்று பதிவிட்டுள்ளார்.

 

 

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆனந்த கண்ணனுக்கு இரங்கல் தெரிவித்து உருக்கமாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

ALSO READ | Kasada Thapara: OTT இல் வெளியாகிறது இயக்குனர் சிம்பு தேவனின் கசட தபற ஆந்தலாஜி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News