ரஜினியின் தர்பார் படத்தில் பாலிவுட் நடிகர் ஒப்பந்தம்!

ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தில் பாலிவுட் நடிகர் பிரதிக் பாபர் ஒப்பந்தமாகி இருக்கிறார். 

Last Updated : Apr 18, 2019, 12:58 PM IST
ரஜினியின் தர்பார் படத்தில் பாலிவுட் நடிகர் ஒப்பந்தம்! title=

ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தில் பாலிவுட் நடிகர் பிரதிக் பாபர் ஒப்பந்தமாகி இருக்கிறார். 

ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் ரஜினியின் 167-வது படத்திற்கு `தர்பார்' என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

மும்பை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு பணிகளையும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பையும், டி.சந்தானம் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர். ராம் லக்‌ஷ்மன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, விவேக் பாடல்களை எழுதுகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.

இந்நிலையில் தர்பார் படத்தில் பிரதிக் பாபர் மும்பையை ஆட்டி வைக்கும் தாதாவின் மகனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

மும்பையில் 3 மாதங்கள் தொடர்ச்சியாக தர்பார் படப்பிடிப்பு நடக்க உள்ளது. பொங்கல் பண்டிகையன்று படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது.

Trending News