ருத்ரன் படத்தின் ருத்ரதாண்டவம்... முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Rudhran Movie First Day Collection: ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் வெளியான ருத்ரன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Apr 15, 2023, 05:20 PM IST
  • இத்திரைப்படம் உலகெங்கும் 800 திரையரங்குகளில் வெளியானது.
  • தமிழ்நாட்டில் மட்டும் 400 திரையரங்குகளில் வெளியானது.
ருத்ரன் படத்தின் ருத்ரதாண்டவம்... முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? title=

Rudhran Movie First Day Collection: தமிழ் சினிமாவில் நடன கலைஞராக அறிமுகமாகி, பின்னர் இயக்குநர் அவதாரம் எடுத்து, நாள் போக்கில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் மாறி தற்போது முக்கிய நடிகர் என்ற அந்தஸ்திற்கு உயர்ந்தவர், ராகவா லாரன்ஸ். 

முனி, காஞ்சனா சீரிஸ் பேய் படங்கள் மூலம், தமிழ்நாடு குடும்பங்களின் அத்தனை பேர் மனதிலும் ராகவா லாரன்ஸ் மிகவும் பிரபலமடைந்துவிட்டார். இவரின் படங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைத்து தரப்பினரும் பார்த்து ரசிக்கின்றனர். அவர் தற்போது, ரஜினிகாந்தின் 'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய பி. வாசு இயக்கும் நிலையில், வடிவேல் உள்ள நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 

மேலும் படிக்க | திடீர் என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜிபி முத்து! ஏன் தெரியுமா?

சந்திரமுகி இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருந்துவரும் சூழலில், ராகவா லாரான்ஸ் நடித்து நீண்ட நாளாக வெளிவராமல் இருந்து 'ருத்ரன்' படத்தின் வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டது. நீண்ட நாள்களாக தள்ளிப்போய் வந்த இந்த திரைப்படம்  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேற்று (ஏப். 14) வெளியானது. 

ருத்ரன் படத்தில், ராகவா லாரன்ஸ் உடன் பிரியா பவானி சங்கர், நாசர், சரத்குமார், காளி வெங்கட், சச்சு உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். தமிழ் புத்தாண்டு, வார இறுதி, கோடை விடுமுறை என முதல் மூன்று நாளிலும் வசூலை குவிக்க திட்டமிட்டு நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. இருப்பினும், திரையரங்குகளில் கூட்டம் அதிகமாகவே காணப்படுவதாகவும் தகவல்கள் கூறிகின்றன. 

அந்த வகையில், படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 5 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா, தெலங்கானா, கேரளாவிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்தாண்டில் வெளியான வாரிசு, துணிவு, வாத்து, பத்து தல படங்களை தொடர்ந்து, முதல் நாளில் அதிக வசூலை குவித்த வரிசையில் ருத்ரன் ஐந்தாவது இடத்தை பிடித்தது. தமிழ்நாட்டில் 2.5 கோடி ரூபாயும், ஆந்திரா, தெலங்கானாவில் மட்டும் 1.5 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. 

படத்தின் பட்ஜெட் சுமார் 20 கோடி ரூபாய் என கூறப்படும் நிலையில், இப்படம் உலகெங்கும் 800 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் 400 திரையரங்குகளில் வெளியானது. தமிழ் புத்தாண்டான நேற்று மொத்தம் 8 திரைப்படங்கள் தமிழ்நாட்டில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | திடீர் மாற்றம்! லோகேஷ் கனகராஜ்க்கு முன் இந்த இயக்குனர் படத்தில் ரஜினி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News