நட்சத்திர கலை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ரஜினிக்காந்த் - கமல் சந்திப்பு!!

நட்சத்திரக் கலை விழாவில் பங்கேற்க மலேசியா வந்த ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் சந்தித்து கொண்டனர்.

Last Updated : Jan 6, 2018, 06:43 PM IST
நட்சத்திர கலை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ரஜினிக்காந்த் - கமல் சந்திப்பு!! title=

நட்சத்திரக் கலை விழாவில் பங்கேற்க மலேசியா வந்த ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் சதித்து கொண்டனர்.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நட்சத்திரக் கலை விழா மலேசியாவில் நாளை மறுநாள் மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் தற்போது மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள 18 கிரவுண்டு காலி இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக நட்சத்திர கலை விழாக்கள் நடத்தி நிதி திரட்டப்படும் என்று ஏற்கனவே நடிகர் சங்க நிர்வாகிகள் அறிவித்து இருந்தனர்.

இதை தொடர்ந்து,மலேசியாவில் நடிகர்-நடிகைகளின் நட்சத்திர கலை விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு  நாளை மறுநாள் இந்த விழா நடக்கிறது. மலேசிய அரசுடன் இணைந்து தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை இந்த விழாவை நடத்துகிறது.

தென்னிந்தியாவை சேர்ந்த நடிகர், நடிகை மற்றும் கலை நட்சத்திரங்கள் கலந்துகொள்கின்றனர். இந்த விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நட்சத்திர கலை விழாவில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில், நட்சத்திரக் கலை விழாவில் கலந்துகொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று மலேசியா வந்தடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதே போன்று நடிகர் கமல்ஹாசன் தற்போது நட்சத்திரக் கலை விழாவில் கலந்துகொள்வதற்காக மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ளார். இதில் கலந்து கொள்ள  மலேசியா சென்ற ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் சதித்து கொண்டனர்.

நடிகர் சங்க அறக்கட்டளையில் நடிகர் கமல்ஹாசன் உறுப்பினராக இருக்கிறார். பொருளாளராக கார்த்தி மற்றும் நடிகர் சங்க தலைவராக நாசர் உள்ளார். இந்த விழாவில் 340 நடிகர்-நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். இதில், 200-க்கும் மேற்பட்ட நடிகர்-நடிகைகள் ஏற்கனவே மலேசியா சென்று விட்டனர் என்பது குறிபிடத்தக்கது.

 

 

Trending News