ராஷ்மிகா மந்தனாவை ரொம்ப பிடிக்கும்: பிரபல இளம் கிரிக்கெட் வீரரின் ஓபன்டாக்

இப்போது இருக்கும் நடிகைகளில் ராஷ்மிகா மந்தனா என்னுடைய கிரஷ் என கூறியிருக்கிறார் சுப்மான் கில். பேட்டி ஒன்றில் அவரிடம் கேட்ட கேள்விக்கு இந்த பதிலை கொடுத்திருக்கிறார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 14, 2023, 04:34 PM IST
ராஷ்மிகா மந்தனாவை ரொம்ப பிடிக்கும்: பிரபல இளம் கிரிக்கெட் வீரரின் ஓபன்டாக் title=

ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலத்தில் உச்சம் தொட்ட அவர், பாலிவுட்டிலும் கால் பதித்துவிட்டார். அல்லு அர்ஜூனுடன் அவர் இணைந்து நடித்த புஷ்பா செம ஹிட் அடித்தது. பாக்ஸ் ஆஃபீஸில் வசூலை வாரிக் குவித்த அந்த படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாகிக் கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அதேநேரத்தில் ராஷ்மிகா இப்போது அடுத்தடுத்த பட வாய்ப்புகளால் பிஸியாக இருக்கிறார். குறிப்பாக பாலிவுட்டில் அவருக்கான வாய்ப்புகள் வரிசைக் கட்டி நிற்கின்றன.

மேலும் படிக்க | மாஸ் காட்டும் பெண் கதாபாத்திரங்களை கொண்ட டாப் 10 வெப் சீரிஸ் & படங்கள்!

தமிழில் வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த ராஷ்மிகா பல முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகளும் காத்துக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் அவரைப் பற்றிய காதல் கிசுகிசுக்களும், ராஷ்மிகாவுக்கு இருக்கும் வாய்ப்புகளைப் போலவே வரிசைக் கட்டி நிற்கின்றன. அவர் அல்லு அர்ஜுனை காதலிப்பதாக தகவல் வெளியானது. இருவரும் சேர்ந்து அண்மையில் மாலத்தீவு சுற்றுலா சென்றதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இப்படி இருக்கையில் ராஷ்மிகாவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் சுப்மான் கில்லிடம் இருந்து ஒரு ஆஃபர் வந்துள்ளது.

அவருக்கு ராஷ்மிகா மந்தனா என்றால் மிகவும் இஷ்டமாம். பேட்டி ஒன்றில் இப்போது உங்களுக்கு பிடித்த பாலிவுட் ஹீரோயின் யார்? என சுப்மான் கில்லிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு சட்டென பதில் அளித்த சுப்மான் கில், எனக்கு ராஷ்மிகா மந்தனா மீது கிரஷ் இருக்கிறது என கூறினார். கடந்த ஆண்டு இதேபோன்ற ஒரு கேள்விக்கு சாரா என பதிலளித்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே சுப்மான் கில், இந்திய அணியின் நட்சத்திர பிளேயர் சச்சின் தெண்டுல்கரின் மகள் சாரா தெண்டுல்கருடன் டேட்டிங் செய்வதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இது குறித்து இருவருமே மௌனம் காத்து வருகின்றனர். 

மேலும் படிக்க | 2023ல் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் தமிழ் படங்கள் இவைதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News