பல வருஷமா நம்புனேன்.. ஆனா..புலம்பிய ராஷ்மிகா! மேனேஜரால் அப்செட்!

நடிகை ராஷ்மிகா மந்தனாவை அவரது பல வருட மேனேஜர் ஏமாற்றிய சம்பளம் தான் சினிமா வட்டாரத்தில் தற்போது பேசு பொருளாகியுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பை காணலாம்.  

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Jun 19, 2023, 05:18 PM IST
  • ராஷ்மிகா மந்தனா செம அப்செட்
  • மேனேஜ் அவரை ஏமாற்றிவிட்டாராம்
  • உடனடியாக வேலையில் இருந்து நீக்கம்
பல வருஷமா நம்புனேன்.. ஆனா..புலம்பிய ராஷ்மிகா! மேனேஜரால் அப்செட்!  title=

தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். அதேநேரம் புஷ்பா 2 படத்திலும் நடித்து வருகிறார். கைநிறைய படங்களை வைத்துள்ள இவர், பல விளம்பர படங்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது சந்தீப் ரெட்டி, ரன்பீர் கபூர், அனில் கபூர் ஆகியோருடன் அனிமல் படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது. இப்படி படு பிஸியாக இருக்கும் ராஷ்மிகாவை அவரது மேனேஜர் ஏமாற்றி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | சரிகமப சீசன் 3 டைட்டில் வின்னர் இவரா..? அடுத்த இடம் யாருக்கு தெரியுமா? முழு விவரம்..!

அதாவது ராஷ்மிகா நடிக்கத்தொடங்கிய காலத்தில் இருந்தே இவர் தான் மேனேஜராக உள்ளாராம். இவரால் தான் அடுத்தடுத்து பல படங்களும் இவருக்கு புக் ஆனதாம். இதனால் அவரை மிகவும் நம்பியுள்ளார் ராஷ்மிகா. கணக்கு வழக்குகளை மொத்தமாக அவரிடமே ஒப்படைத்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில் தான் தனது மேனேஜர் தனது பணத்தில் இருந்து 80 லட்சம் ரூபாயை திருடியது ராஷ்மிகாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் கடுப்பான ராஷ்மிகா தயவு தாட்சனம் பார்க்காமல் உடனடியாக அவரை வேலையை விட்டு துரத்திவிட்டாராம். 

என்னதான் நீண்ட கால மேனேஜர் என்றாலும் நேர்மையாக இல்லாத யாரையும் மன்னிக்க ராஷ்மிகா தயாராக இல்லை என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு காவல்துறை புகாரெல்லாம் அவர் கொடுத்து சீன் கிரியேட் செய்ய விரும்பவில்லையாம். மாறாக டக்கென மேனேஜரை வேலையை விட்டு துரத்திவிட்டாராம்.  ராஷ்மிகா மந்தனா ஒரு படத்துக்கு 3 முதல் 5 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அவமானத்தால் ரத்னாவுக்கு சண்முகம் கொடுத்த வாக்கு.. சந்தோஷத்தில் சௌந்தரபாண்டி - அண்ணா இன்றைய எபிசோட் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News