RIP Vadivel Balaji: விவேக், பிரசன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பிற கோலிவுட் நடிகர்கள் இரங்கல்....!

காமெடி நடிகர் வடிவேல் பாலாஜியின் மறைவுக்கு விவேக், பிரசன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பிற கோலிவுட் நடிகர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். 

Last Updated : Sep 10, 2020, 06:49 PM IST
RIP Vadivel Balaji: விவேக், பிரசன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பிற கோலிவுட் நடிகர்கள் இரங்கல்....! title=

காமெடி நடிகர் வடிவேல் பாலாஜியின் மறைவுக்கு விவேக், பிரசன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பிற கோலிவுட் நடிகர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். 

பிரபல சின்னத்திரை காமெடி நடிகரான வடிவேல் பாலாஜி (Vadivel Balaji) உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். முன்னணி காமெடி நடிகர் வடிவேலு போன்று தோற்றத்தை உடைய, நகைச்சுவையில் வடிவேலுவை பின்பற்றும் சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த நடிகர் வடிவேல் பாலாஜி (Vadivel Balaji). இவர் வடிவேல் பாலாஜி என்று தான் அனைவராலும் அழைக்கப் படுவார். பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலில் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் சிறந்து விளங்கியவர் இவர். 

 

ALSO READ | Watch: காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி மரணம்.....உடைந்து போன ரோபோ சங்கர்

இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் திடீர் மாரடைப்பு காரணமாக இரு கைகளும் வாதம் ஏற்பட்டு முடங்கி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 42 ஆகும். வென்டிலேட்டர் ஆதரவில் இருந்த பாலாஜி, பின்னர் அவரது குடும்பத்தால் நிதி நிர்வகிக்க முடியாததால் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். நகைச்சுவை நடிகர் மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 15 நாட்களாக சிகிச்சையில் இருந்தார். அவரது உடல்நலத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக நடிகர் இன்று அதிகாலை காலமானார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வடிவேல் பாலாஜியின் மரணம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிர் பிரிந்த செய்தி கேட்ட பல சினிமா பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விவேக், பிரசன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பிற கோலிவுட் நடிகர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ALSO READ | உடல்நலக்குறைவு காரணமாக காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்

இதற்கிடையில், மரணமடைந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் உடல் நாளை மதியம் சேத்துப்பட்டு இடுகாட்டில் அடக்கம் செய்யப்படுகிறது.

Trending News