தெலுங்கு சினிமாவில் தடம் பதிக்க போகும் சல்மான்கான்!

தெலுங்கு சினிமாவில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் லூசிபர் (Lucifer) படத்தின் ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் சல்மான்கானை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 21, 2021, 08:56 PM IST
  • மலையாளத்தில் 2019ஆம் ஆண்டு பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த திரைப்படம் லூசிஃபர் (Lucifer).
  • மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கும் லூசிபர் (Lucifer) ரீமேக்கை மோகன் ராஜா இயக்குகிறார்.
  • லூசிபர் (Lucifer) படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சல்மான்கானை நடிக்க வைப்பதற்காக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது
தெலுங்கு சினிமாவில் தடம் பதிக்க போகும் சல்மான்கான்!  title=

Lucifer தெலுங்கு சினிமாவில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் லூசிபர் (Lucifer) படத்தின் ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் சல்மான்கானை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.

மலையாளத்தில் 2019ஆம் ஆண்டு பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த திரைப்படம் லூசிஃபர் (Lucifer).  இத்திரைப்படம் மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.  மோகன்லாலை தனது குருவாக கருதும் பிரித்திவிராஜ் படம் முழுக்க அவருக்கு மாஸ் சீன்களாக வைத்து கலக்கி இருந்தார்.  அரசியல் களத்தை மையமாகக் கொண்டிருந்த திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. 

 

மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கும் லூசிபர் (Lucifer) ரீமேக்கை மோகன் ராஜா இயக்குகிறார்.  இப்படத்திற்கு காட்பாதர் (Godfather) என்று பெயர் வைக்கப்பட்டு இப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.   இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.  தெலுங்கு ரசிகர்களுக்காக இப்படத்தில் சிறிய சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இதனிடையில் லூசிபர் (Lucifer) படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சல்மான்கானை நடிக்க வைப்பதற்காக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.  சல்மான்கானும் இப்படத்திற்காக தேதிகள் ஒதுக்கி உள்ளதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலையாளத்தில் பிரித்திவிராஜ் நடித்த கதாபாத்திரத்தில் சல்மான்கான் நடிக்க இருக்கிறார்.  லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் சல்மான்கானை நடிக்க வைப்பதன் மூலம் இந்தியில் இப்படம் டப் செய்யப்பட்டால் வசூல்ரீதியாக உதவியாக இருக்கும் என்று எண்ணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. 

ALSO READ Vijay vs rajini: தமிழ் சினிமாவில் ரஜினியை முந்துகிறார் விஜய்!

தமிழில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடிக்க இருந்ததாகவும் சமீபத்தில் அதிலிருந்து விலகிய தாகவும் தகவல்கள் வெளியானது. சிரஞ்சீவி நடிப்பில் உருவான ஆச்சாரியா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்ட நிலையில் நாளை அவரின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த படத்தில் ராம்சரண், பூஜா ஹெக்தே மற்றும் காஜல் அகர்வால் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYe

Trending News