சோனம் கபூர் பிறந்த நாள் இன்று! குவியும் ட்விட்டர் வாழ்த்து!

பாலிவுட் நடிகை சோனம் கபூரின் பிறந்த நாள் ட்விட்டர் வாழ்த்துகள் ஒரு பார்வை!

Last Updated : Jun 9, 2018, 01:09 PM IST
சோனம் கபூர் பிறந்த நாள் இன்று! குவியும் ட்விட்டர் வாழ்த்து! title=

பாலிவுட் படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை சோனம் கபூர். இவர் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். பின்னர், இவர்களுடைய திருமணம்
மும்பையில் பெரியார்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 

இவர்களது திருமணத்தில் சல்மான் கான், சாருக் கான், ஷாஹித் கபூர், கரன் ஜோஹர், கத்ரீனா கைஃப், ஷில்பா அலியா பட், ரன்பீர் கபூர், ஷெட்டி, அக்ஷய் குமார், ட்விங்கிள் கன்னா, அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் கங்காணா ரனாத் போன்ற முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.  

இவர்களது திருமணத்தையடுத்து, சோனம் கபூர், தற்போது இயக்குநர் ஷஷங் கோஷ் இயக்கத்தில் உருவாகும் ''வீரே தி வெட்டிங்" திரைப்படத்தில் முன்னணி ரோலில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவருடன் கரீனா கபூர், ஸ்வரா பாஸ்கர், ஷிகா தல்சானியா ஆகியோரும் களமிறங்கியுள்ளனர். கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி வெளியிடப்பட்ட இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.  

இந்நிலையில், சோனம் கபூரின் பிறந்த நாளை முன்னிட்டு ட்விட்டரில் பல்வேறு பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. 

Trending News