சீதா ராமன் அப்டேட்: ராம், சீதாவை பிரிக்க பூஜை செய்ய மகா.. சீதா கொடுக்கு ட்விஸ்ட்

Seetha Raman Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 20, 2023, 11:56 AM IST
  • குழந்தையை கலைத்தே ஆக வேண்டும் என்று கூறும் கல்பனா.
  • சந்தோசப்படும் ராம்.
  • மந்திரவாதி வைத்து பூஜை செய்யும் மகா.
சீதா ராமன் அப்டேட்: ராம், சீதாவை பிரிக்க பூஜை செய்ய மகா.. சீதா கொடுக்கு ட்விஸ்ட் title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மகா மந்திரவாதியை சந்தித்து ராமையும் சீதாவையும் பிரிக்க வேண்டும் என பேசிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

குழந்தையை கலைத்தே ஆக வேண்டும் என்று கூறும் கல்பனா

அதாவது, மகா குழந்தை, பிறந்தாலும் பிறக்கலானாலும் அந்த சீதாவை நான் வீட்டை விட்டு வெளியே அனுப்பிடுவேன் என்று சொல்லி உள்ளே செல்ல கல்பனா மகா சொல்ற பிளான் எல்லாம் வேஸ்ட், அந்த குழந்தையை கலைத்தே ஆக வேண்டும் என்று சொல்ல அர்ச்சனாவும் இந்த பிளானுக்கு சம்மதம் தெரிவிக்கிறாள்.

சந்தோசப்படும் ராம்

அதனை தொடர்ந்து மீரா சீதா ரூமுக்குள் வந்து சோகமாக இருக்கும் அவளிடம் ராமிடம் பேசு என்று சொல்ல சீதா ராமுக்கு போன் செய்து அம்மா வர போறாங்க என்று உருக்கமாக பேச ராம் சந்தோசப்படுகிறான். சீதா இப்போ சந்தோசமாக இருந்தாலும் நீங்க பக்கத்துல இல்லாதது கவலையாக இருக்கு என்று வருத்தப்படுகிறாள். 

மேலும் படிக்க | பான்- வேர்ல்ட் படமாக உருவாகும் ஹனுமான்! வெளியானது டிரைலர்!

மந்திரவாதி வைத்து பூஜை செய்யும் மகா

அடுத்ததாக மகா வீட்டிற்கு மந்திரவாதியை வரவைத்து ராம், சீதாவை பிரிக்க பூஜை செய்ய ஏற்பாடு செய்கிறாள். ஆனால் உண்மையான காரணத்தை மறைத்து சீதாவுக்காகவும் அவளுடைய குழந்தைக்காகவும் தான் இந்த பூஜை என்று சொல்ல சேது உட்பட எல்லாரும் நம்பி விடுகின்றனர். இந்த பூஜைக்காக கோபப்படாமல், உப்பு போட்ட உணவை உண்ணாமல் விரதம் இருக்கு வேண்டும் என சாமியார் சொல்ல இந்த விஷயம் கேட்டு எல்லாரும் வேண்டாம் என்று சொல்ல மகா விரதம் இருக்க போவதில் உறுதியாக இருக்கிறாள். அடுத்து மீராவும் சீதாவும் சேர்ந்து மகா சாப்பிடும் சாப்பாட்டில் உப்பை கலக்க பிளான் போடுகின்றனர். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | இந்த ஆண்டு மாஸாக கம்பேக் கொடுத்த தமிழ் ஹீரோக்களின் பட்டியல் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News