பாலிவுட்டில் முதல் நாளில் அதிக வசூலை குவித்தது ஜவான்... எத்தனை கோடிகள் தெரியுமா?

Jawan Day 1 Collection: ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் நேற்று வெளியான நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 8, 2023, 09:08 AM IST
  • படத்திற்கு கடும் எதிர்பார்ப்பு இருந்தது.
  • நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் இதில் நடித்திருந்தனர்.
  • ஜவான் படத்திற்கு நல்ல ஓப்பனிங் வசூலும் கிடைத்துள்ளது.
பாலிவுட்டில் முதல் நாளில் அதிக வசூலை குவித்தது ஜவான்... எத்தனை கோடிகள் தெரியுமா? title=

Jawan Day 1 Collection: ஷாருக்கான் உலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக அறியப்படுகிறார். இந்த தொடக்கத்தில் அவர் நடிப்பில் வெளியான பதான் படத்திற்கு பிறகு தற்போது ஜவான் திரைப்படம் வெளியாகியுள்ளது. பதான் படத்தின் மாபெரும் வெற்றியால் ஜவான் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

ஜவான் திரைப்படம் திட்டமிட்டப்படி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நேற்று வெளியானது. இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில் இந்தியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்து ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழில் ராஜா ராணி படம் மூலம் அறிமுகமாகி தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து நடிகர் விஜய்யுடன் இணைந்து வெற்றிகரமான படங்களை எடுத்து புகழ் பெற்றவர், இயக்குநர் அட்லீ. 

மேலும், இந்த படத்தில் அட்லீ மட்டுமின்றி இசையமைப்பாளர் அனிருத், ஒளிப்பதிவாளர் ஜி.கே. விஷ்ணு, படத் தொகுப்பாளர் ரூபன், கலை இயக்குநர் முத்துராஜ், நடன இயக்குநர் ஷோபி என பெரும்பாலான தொழில்நுட்ப கலைஞர்கள் தமிழ் சினிமாத்துரையை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும், அட்லீ முதல்முறையாக பாலிவுட்டில் இயக்கிய படம் என்பதாலும், ஷாருக்கான் என்ற ஒரு காரணத்திற்காகவும் இப்படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க | ‘ஜவான்’ படத்திற்காக அட்லீ வாங்கிய சம்பளம் இவ்வளவா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

அந்த எதிர்பார்ப்பு படத்தின் டிக்கெட் முன்பதிவு மற்றும் முதல் நாள் கூட்டத்திலேயே எதிரொலித்தது எனலாம். வட மாநிலங்களில் ஷாருக்கான் படங்களுக்கு இருக்கும் வரவேற்பை போலவே தென் மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நீண்ட நாள்களுக்கு ஷாருக்கான் படங்களுக்கு தென் மாநிலங்களிலும் நல்ல ஓப்பனிங்கை ஜவான் படம் ஆரம்பித்துள்ளது எனலாம்.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி முதல் நாளில், ஜவான் அனைத்து மொழிகளிலும் ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஷாருக்கான் நடித்த படம் இப்போது பாலிவுட்டின் மிகப்பெரிய ஓப்பனராக உள்ளது. அதாவது, முதல் நாளில் அதிக வசூலை குவித்த பாலிவுட் படமாக ஜவான் உருவெடுத்துள்ளது. ஜவான் திரைப்படத்தின் மொத்த வசூலில் இந்தி பதிப்பில் மட்டும் 58.67 சதவீதத்தை பெற்றதாக கூறப்படுகிறது. 

இரவு நேரக் காட்சிகளின் போது அதிகபட்சமாக 69.34 சதவீதம் பேர் திரையரங்கிற்கு வந்துள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில், இந்தி பதிப்பில் 81 சதவீதத்துடன் சென்னை அதிக ஆக்கிரமிப்புகளைக் கண்டது, அதே நேரத்தில் சூரத் 44.50 சதவீதமாக குறைந்தபட்சமாக காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..

தமிழ் பதிப்பில், ஜவான் ஒட்டுமொத்தமாக 55.80 சதவீத ஆக்கிரமிப்பையும், தெலுங்கு பதிப்பு 76.06 சதவீத பார்வையாளர்களைப் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது..

அட்லீ, நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியுடன் ஷாருக்கான் முதல் முறையாக இணைந்துள்ள படம் ஜவான். இருப்பினும், நயன்தாராவும் சேதுபதியும் ஜவான் படத்திற்கு முன் பல படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர். அட்லீயின் இந்தி இயக்குநராக அறிமுகமான படம் என்றாலும் ஆக்ஷன்-டிராமாவும் சிறப்பாக வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | Jawan Review: ஜவான் படம் எப்படி இருக்கு? டாப் ட்விட்டர் விமர்சனம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News