பாடகி சின்மயியின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்!

பிரபல பாடகி சின்மயியின் இன்ஸ்டாகிராம் கணக்கை, இன்ஸ்டாகிராம் நிறுவனம் முடங்கியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 24, 2022, 07:13 PM IST
  • பாடகி சின்மயி இன்ஸ்டாகிராம் முடக்கம்.
  • நேற்று இவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது.
  • புதிய ஐடியில் இருந்து தனது பழைய ஐடி முடக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
பாடகி சின்மயியின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்! title=

பிரபல பாடகியான சின்மயி அனைவர்க்கும் நன்கு பரிட்சயமான ஒரு முகம், இவர் பல நடிகைகளுக்கு பிண்ணனி குரல் கொடுத்து இருக்கிறார், அதிலும் குறிப்பாக நடிகை சமந்தாவிற்கு குரல் கொடுப்பதில் இவர் அதிக பிரபலமானவர்.  பாடகி சின்மயி தனது கணவர் ராகுல் ரவீந்திரன் மற்றும் தனக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளோடு புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதள பக்கமான இன்ஸ்டகிராம் கணக்கில் பதிவேற்றிய மறுநாள் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டு இருக்கிறது. அவரது டிஎம் பிளாக் செய்யப்பட்ட பிறகு சின்மயி இதனை பார்த்துள்ளார், பிறகு ஒரு பேக்கப் கணக்கை உருவாக்கி அதில் ஒரு உள்ளடக்கத்தை பதிவு செய்துள்ளார்.  

Chinmayi

மேலும் படிக்க | 7 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த தனுஷ் - அனிருத்! வெளியானது தாய்க்கிழவி பாடல்!

அதில் "இந்த சமூக ஊடக வணிகங்கள் வெளிப்படையாக, வித்தியாசமாக செயல்படுகின்றன மற்றும் கொள்கைகளின் பெயரில் ஆச்சரியமான நடவடிக்கைகளை எடுக்கின்றன" என்று எழுதியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், "என்னுடைய டிஎம்களில் ஆபாச புகைப்படங்களை அனுப்பும் சில ஆண்களை நான் புகாரளிப்பதால் இன்ஸ்டாகிராம் எனது கணக்கை நீக்கியுள்ளது.  சிறிது காலமாகவே நான் புகாரளிக்கும்போது இப்படி நடந்து வருகிறது.  எப்படியிருந்தாலும், இதுதான் எனது பேக்கப் அக்கவுண்ட்" என்று எழுதியுள்ளார். 

பெண்களைச் ஏமாற்றுபவர்கள் மற்றும் சிறுமிகளுடன் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட முயற்சிக்கும் தமிழ்த் திரையுலகின் சில முக்கியப் பிரமுகர்களின் பெயரை சின்மயி  #MeToo இயக்கத்தின் மூலம் குறிப்பிட்டதிலிருந்து சமூக ஊடகங்களில் அவர் நிறைய துன்பங்களை சந்தித்து வருகிறார்.

மேலும் படிக்க | ஷாருக்கான் படத்தில் கேமியோ ரோலில் விஜய்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News