சல்மான் கானை பாம்பு கடித்தது: இப்போது எப்படி உள்ளார்? கவலையில் ரசிகர்கள்!!

சல்மான் கானின் கையை பாம்பு கடித்ததாகவும், இந்த சம்பவம் அதிகாலை 3.30 மணியளவில் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 26, 2021, 03:25 PM IST
சல்மான் கானை பாம்பு கடித்தது: இப்போது எப்படி உள்ளார்? கவலையில் ரசிகர்கள்!! title=

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானை நேற்று இரவு பாம்பு கடித்ததாக செய்தி வந்துள்ளது. அப்போது அவர் தனது பன்வெல் பண்ணை வீட்டில் இருந்துள்ளார். பாம்பு கடித்ததை அடுத்து, சல்மான் கான் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். 

அவரது உடல்நிலை தற்போது நன்றாக உள்ளது என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சல்மான் கானை (Salman Khan) கடித்த பாம்பு விஷப்பாம்பு இல்லை என்பதால், அவருக்கு பெரிய பிரச்சனை ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

விஷப்பாம்பு இல்லை

சல்மான் கானின் கையை பாம்பு கடித்ததாகவும், இந்த சம்பவம் அதிகாலை 3.30 மணியளவில் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாம்பு கடித்த பிறகு, சல்மான் உடனடியாக எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை கடித்த பாம்பு விஷமற்றது, இதனால் அவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

சல்மான் கான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்

இரவு சிகிச்சைக்குப் பிறகு, சல்மான் கான் டிசம்பர் 26 காலை 9 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது அவர் தனது பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர் மிக வேகமாக குணமடைந்து வருகிறார். 

ALSO READ | நடிகர் விஜய் நண்பர்களுக்கு உதவமாட்டாரா- சஞ்சீவ் ஓபன் டாக் ! 

சல்மான் கானை பாம்பு (Snake) கடித்த விஷயம் தெரிந்ததை அடுத்து, சல்மான் கான் விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். சல்மான் உடல்நிலைக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லை என்ற செய்தி ரசிகர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

சல்மான் கானின் திரைப்படங்கள்

சல்மானின் படங்களைப் பற்றி பேசினால், அவர் கடைசியாக 'ஆந்திம்: தி ஃபைனல் ட்ரூத்' படத்தில் நடித்தார். இந்த படத்தில், அவர் மைத்துனர் ஆயுஷ் சர்மாவுடன் காணப்பட்டார். திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது சல்மான் கான் 'டைகர் 3' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கத்ரீனா கைஃபையும் (Katrina Kaif) சல்மான் கானையும் மீண்டும் ஒரு முறை ஒன்றாக காண முடியும். 

ALSO READ | முன்னணி நடிகருக்கு ஜோடியான மேகா ஆகாஷ்..! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News