சோனம் கபூர் ஆர்.எஸ்.எஸ். தலைவரின் விவாகரத்து கருத்து "பிற்போக்குத்தனமான முட்டாள்தனம்": சோனம் கபூர்

எந்த விவேகமுள்ள மனிதன் இப்படி பேசுவார்கள்? என ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத்தின் "விவாகரத்து" குறித்த கருத்துக்கு பதிலடி தந்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 17, 2020, 04:43 PM IST
சோனம் கபூர் ஆர்.எஸ்.எஸ். தலைவரின் விவாகரத்து கருத்து "பிற்போக்குத்தனமான முட்டாள்தனம்": சோனம் கபூர் title=

மும்பை: ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத் ஞாயிற்றுக்கிழமை, "படித்த மற்றும் வசதியான" குடும்பங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகம் காணப்படுவதால், கல்வியும் செல்வமும் ஆணவத்தைக் கொண்டு வருகிறது, இதன் விளைவாக குடும்பங்கள் பிரிந்து போகின்றன என அகமதாபாத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தொழிலாளர்கள் மத்தியில் மோகன் பகவத் உரையாற்றினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள பாலிவுட் நடிகை சோனம் கபூர், "மோகன் பகவத்தின் பேச்சு பிற்போக்குத்தனமான முட்டாள்தனமானது" எனக் கூறியுள்ளார்.

விவாகரத்து குறித்து RSS தலைவர் மோகன் பகவத்தின் கருத்துக்கு, தனது சமூக வலைத்தளமான டிவிட்டரில், எந்த விவேகமுள்ள மனிதன் இப்படி பேசுவார்கள்? பிற்போக்குத்தனமான முட்டாள்தனமான அறிக்கைகள்" எனப் பதிவிட்டுள்ளார்.

 

மேலும் அகமதாபாத்தில் நடந்த கூட்டத்தில், மோகன் பகவத், இந்தியாவில் இந்து சமுதாயத்திற்கு மாற்று இல்லை என்றும் கூறினார்.

Trending News