சர்சையை கிளப்பியது சன்னி லியோனின் விளம்பரம்!

Last Updated : Sep 20, 2017, 10:10 AM IST
சர்சையை கிளப்பியது சன்னி லியோனின் விளம்பரம்! title=

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி புயலான நடிகை சன்னி லியோன் முன்னணி ஹிரோக்களுடன் பல படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

சினிமாவை தவிர நடிகை சன்னி லியோன் சில விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இந்த வகையில் தற்போது சன்னி லியோன் படத்துடன் குஜராத், சூரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரிய விளம்பரப் பலகை சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதில் உங்கள் அன்பிற்கினிய உங்களுக்கான நபர்களுடன் உறவாட என்ற வாசகத்துடன் அந்த விளம்பரம் உள்ளது.

இது நவராத்திரி தினத்தில் இறைவனை நினைத்து பார்ப்பதற்கு பதில், தவறான சிந்தனை தூண்டும் விதத்தில் உள்ளதாக குஜராத் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சன்னி லியோனின் இந்த சர்ச்சையான விளம்பரம் குறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் புகார் அளித்து வருகின்றனர்.

Trending News