விவாகரத்து லிஸ்டில் இணைந்த 'சுப்ரமணியபுரம்' பட நாயகி..! காதல் கணவரை பிரிகிறாரா..?

Swathi Reddy: திரைப்பிரபலங்கள் பலர் வரிசையாக தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து விடுபட்டு விவாகரத்து செய்திகளை அறிவித்து வரும் நிலையில், அந்த லிஸ்டில் புதிதாக ஒரு நடிகை இணைந்துள்ளார். 

Written by - Yuvashree | Last Updated : Jul 19, 2023, 03:42 PM IST
  • தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் ஸ்வாதி ரெட்டி.
  • 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
  • இவருக்கு விவாகரத்து ஆக உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
விவாகரத்து லிஸ்டில் இணைந்த 'சுப்ரமணியபுரம்' பட நாயகி..! காதல் கணவரை பிரிகிறாரா..?  title=

‘சுப்ரமணியபுரம்’ படத்தில் நாயகியாக நடித்திருந்த ஸ்வாதி ரெட்டி அவரது கணவரை பிரிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஸ்வாதி ரெட்டி:

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் ஸ்வாதி ரெட்டி. ரஷ்யாவில் பிறந்து மும்பையில் வளர்ந்த இவர் டேஞ்சர் என்ற தெலுங்கு படம் மூலம் திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்தார். 2008ஆம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் படத்தில் ஜெய்க்கு காதலியாக நடித்து பிரபலமானார். இதையடுத்து அதே ஜெய்க்கு ஜோடியாக 2014ஆம் ஆண்டு ‘வடகறி’ என்ற படத்தில் நடித்தார். இதற்கிடையில் தெலுங்கு மற்றும் மலையாள உலகின் பிரபலமான ஹீரோக்களுடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார். இவரது சிங்கப்பல்லும், அழகான சிரிப்பும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தமான ஒன்று. 

மேலும் படிக்க | பிரபல நடிகர் குறித்து அவதூறு பேச்சு: கம்பி எண்ணப்போகும் நட்சத்திர ஜோடி!

திருமணம்:

ஸ்வாதி, கேரளாவை சேர்ந்த விகாஸ் வாசு என்ற விமான ஓட்டுநரை காதலித்து வந்தார். இவர்கள், கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த விழாவில், இரு வீட்டாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். திருமணம் ஆன பிறகு, இவர் சினிமாவில் சில மாதங்கள் நடிக்காமல் இருந்தார். பின்னர் 2019ஆம் ஆண்டு திருசூர் புரம் என்ற மலையாள படத்தில் நடித்தார். அடுத்து 2022ஆம் ஆண்டு பஞ்சதந்திரம் என்ற ஆந்தாலஜி படத்திலும் நடித்தார். இவர், தனது காதல் கணவரை பிரிய உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. 

விவாகரத்து..?

ஸ்வாதிக்கு திருமணம் ஆன புதிதில் இவரது திருமண போட்டோக்கள் வெளியாகி வைரலாகி வந்ததன. ஸ்வாதியும் தனது சமூக வலைதள பக்கங்களில் அந்த புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், அவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்து தன் திருமண புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கியுள்ளார். இதனால் இவர் கணவரை பிரிந்திருக்கலாம் என சினிமா வட்டாரங்களில் பேசிக்கொள்கின்றனர். 

பழைய சர்ச்சை:

நடிகை ஸ்வாதிக்கு விவாகரத்து ஆக உள்ளது என இப்போது அல்ல, 2020ஆம் ஆண்டே தகவல் பரவியது. இதையடுத்து, அது தவறான தகவல் என ஸ்வாதி தன் சமூக வலைதள பக்கங்களில் விளக்கமளித்தார். கணவருடன் இருந்த வீடியோக்களை அவர் நீக்கியதால் அப்படிப்பட்ட தகவல் அப்போது பரவியது. இதனால் மிகவும் அப்செட்டான ஸ்வாதி, இது போன்ற விஷயங்கள் கொஞ்சம் கூட சரியில்லை என்றும் ப்ளு டிக் வைத்துள்ள ஒரு நடிகை மட்டுமே என்றும் கூறிவிட்டு இன்ஸ்டாகிராமில் இருந்து ப்ரேக் எடுப்பதாக தெரிவித்தார். சில மாதங்கள் தன் இன்ஸ்டா பக்கம் எட்டி பார்க்காமலும் இருந்தார். தற்போதுதான் புதிய வீடியோக்களையும் போட்டோக்களையும் பதிவிட்டு வருகின்றார். 

வாய் திறக்காமல் இருக்கும் நடிகை..!

முன்னர் தன் திருமணம் குறித்த சர்ச்சைக்கு தாமதிக்காமல் மறுப்பு தெரிவித்த ஸ்வாதி, தற்போது வெளியாகியுள்ள தகவல் குறித்து இப்போது வரை வாய்திறக்காமல் இருக்கிறார். இதனால், ரசிகர்கள் இந்த தகவல் உண்மை தானோ என்று கேள்வியெழுப்பியுள்ளனர். 

மேலும் படிக்க | குக் வித் கோமாளி அஷ்வினுக்கு விரைவில் திருமணம்..? மணப்பெண் யார் தெரியுமா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News