தளபதி 68 படத்தின் முக்கியமான அப்டேட்டை கூறிய நடிகர் ஜீவா! இயக்குனர் இவர் தானா?

விஜய்யின் 'தளபதி 68' படத்தை தங்களது குடும்ப நிறுவனம் தான் தயாரிக்கப்போகிறது என்கிற செய்தியினை சூசகமாக தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மகனும், நடிகருமான ஜீவா தெரிவித்து இருக்கிறார்.    

Written by - RK Spark | Last Updated : Apr 30, 2023, 01:43 PM IST
  • 'தளபதி 68' படத்தை அட்லீ இயக்குகிறாரா? கோபிசந்த் மலினேனி இயக்குகிறாரா? என்று தெரியவில்லை.
  • 'லியோ' படம் அக்டோபர் 19ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகுகிறது.
  • 'தளபதி 68' படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தளபதி 68 படத்தின் முக்கியமான அப்டேட்டை கூறிய நடிகர் ஜீவா! இயக்குனர் இவர் தானா? title=

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தின் பணிகளில் பிஸியாக இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.  செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  இந்த ஆண்டில் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பல ரசிகர்களும் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு படமாக 'லியோ' படம் மாறியுள்ளது.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றது, அதிலும் லோகேஷ்-விஜய் கூட்டணியில் வெளியான 'மாஸ்டர்' படம் நல்ல வெற்றியை பெற்றது.  இதனால் மீண்டும் லோகேஷ்-விஜய் கூட்டணியில் வெளியாகவுள்ள 'லியோ' படத்திற்கு எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகின்றது.  இப்படத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு விஜய்யுடன் த்ரிஷா ஜோடி சேர சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலி கான், ஜோஜு ஜார்ஜ், கெளதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் மற்றும் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  மேலும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.

மேலும் படிக்க | உயிர் உங்களுடையது தேவி... குந்தவை எனும் ஐயன் லேடி - மறக்க கூடாத சோழர் குல இளவரசி!

'லியோ' படத்தின் போதே விஜய் நடிக்கப்போகும் அடுத்த படம் பற்றிய பல செய்திகள் ஊடகங்களில் வெளியாகிக்கொண்டே வருகிறது.  லியோவை தொடர்ந்து 'தளபதி 68' படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கின்றனர்.  'தளபதி 68' படத்தை அட்லீ இயக்குவதாக முன்னர் செய்திகள் வெளியானது, ஏற்கனவே அட்லீ விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.  இந்த படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றதால் மீண்டும் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று கூறப்பட்டது.  தற்போது அட்லீ பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார், இப்படத்தின் பணிகள் முடிந்ததும் அவர் விஜய்யை வைத்து 'தளபதி 68' படத்திற்கான பணிகளை தொடங்குவார் என்று செய்திகள் வெளியானது.  இந்த செய்தி ஒருபுறமிருக்க தற்போது விஜய்யின் அடுத்த படத்தை ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.  ஏற்கனவே இந்த தயாரிப்பு நிறுவனம் விஜய்யை வைத்து லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான், திருப்பாச்சி போன்ற படங்களை தயாரித்துள்ள நிலையில் தங்களது நிறுவனத்தின் 100-வது படத்தையும் விஜய்யை வைத்து எடுக்க திட்டமிட்டு இருக்கிறது.  அதன்படி விஜய்யின் தளபதி 68 படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

jiiva

'தளபதி 68' படத்தின் தயாரிப்பு நிறுவனம் எது என்பது தெரிந்துவிட்ட நிலையில், படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த தெளிவான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.  'தளபதி 68' படத்தை அட்லீ இயக்கப்போவதாகவே முன்னர் செய்திகள் வெளியானது, ஆனால் இப்போது தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி 'தளபதி 68' படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  கோபிசந்த் மலினேனி விஜய்யிடம் ஒரு கதையை கூறியதாகவும் அதில் நடிக்க விஜய் ஒப்புதல் தெரிவித்துவிட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கிறது.  அதேசமயம் கோபிசந்த் விஜய்யை சந்தித்தது 'தளபதி 68' படத்திற்காகவா அல்லது விஜய்யின் அடுத்த படத்திற்காகவா என்பது பற்றிய தெளிவான தகவல் கிடைக்கப்பெறவில்லை.  இந்நிலையில் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மகனும், நடிகருமான ஜீவா விஜய்யின் 'தளபதி 68' படத்தை தங்களது குடும்ப நிறுவனம் தான் தயாரிக்கப்போகிறது என்கிற செய்தியினை சூசகமாக தெரிவித்து இருக்கிறார்.  அதாவது இன்ஸ்டாகிராம் உரையாடலின்போது, நெட்டிசன் ஒருவர் ஜீவாவிடம் 'தளபதி 68 அப்டேட் குடுங்க அண்ணா என்று கேட்டதற்கு, விரைவில் வெளியிடப்படும்' என்று ஜீவா பதிலளித்து இருக்கிறார்.

மேலும் படிக்க | நாளை அஜித்தின் ஏகே 62 அறிவிப்பு? டைட்டில் இது தானா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News