லியோ படம் இதுவரை செய்துள்ள நம்பமுடியாத சாதனைகள்!

Leo (2023): லோகேஷ் - விஜய் கூட்டணியில் உருவாகி உள்ள லியோ படம் டிக்கெட் புக்கிங்கில் வசூல் மழை பொழிந்து வருகிறது.    

Written by - RK Spark | Last Updated : Oct 16, 2023, 12:41 PM IST
  • அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் லியோ.
  • விஜய், திரிஷா இந்த படத்தில் நடித்துள்ளனர்.
  • அனிருத் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
லியோ படம் இதுவரை செய்துள்ள நம்பமுடியாத சாதனைகள்! title=

விஜய் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படமான லியோ ரிலீஸுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், அட்வான்ஸ் புக்கிங் ரெஸ்பான்ஸ் ஏற்கனவே அதிகளவில் இருக்கிறது. ரசிகர்களிடம் மிகப்பிரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள லியோ படம் அக்டோபர் 19 முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லியோ படத்தின் முன்பதிவு தொடங்கியதில் இருந்தே சாதனை படைத்து வருகிறது. லியோ படம் இதுவரை பல ரெக்கார்டுகளை முறியடித்து உள்ளது.

மேலும் படிக்க | மலையாள படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்! வெளியானது புலிமடா படத்தின் ட்ரைலர்!

கேரளா பாக்ஸ் ஆபிஸில் லியோ

விஜய்யின் லியோ கேரளாவில் ப்ரீ-சேல்ஸில் இருந்து 7 கோடி ரூபாய் தாண்டியுள்ளது. கேரளா மாநிலத்தில் இதற்கு முன் வேறு எந்தப் படமும் இந்த சாதனையைப் படைத்ததில்லை. முதல் நாளிலேயே 3000 ஷோக்களில் இதுவரை எந்தப் படத்திலும் இல்லாத அளவுக்கு, மாலிவுட் சூப்பர்ஸ்டார்களான மோகன்லால் மற்றும் மம்முட்டியின் பெரிய படங்களின் சாதனையையும் முறியடித்துள்ளது. லியோ கேரளாவில் ரூ. 10 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக ஓப்பனிங் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது KGF 7.30 கோடியுடன் முதல் இடத்தில் உள்ளது.  

உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் லியோ

சமீபத்திய தரவுகளின்படி, லியோ வெளியீட்டிற்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக முன்கூட்டிய டிக்கெட் விற்பனை மூலம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ 61 கோடி வசூலித்துள்ளது. உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் படத்திற்கான முன்பதிவு 61.55 கோடியை தாண்டியுள்ளது. இந்த படம் கோலிவுட்டில் உலகளவில் அதிக முதல் நாள் வசூல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ரஜினியின் 2.0 (ரூ 95 கோடி) முன் பதிவை நிச்சயம்  முறியடிக்கும்.

பதான், ஜவானை வீழ்த்திய லியோ

லியோ படம், வளைகுடாவில் ரெக்கார்டுகளை உருவாக்கி வருகிறது.  வளைகுடா சந்தையில் முதல் நாள் முன் விற்பனையானது $1M ஐ தாண்டியது. பதான், ஜெயிலர் மற்றும் ஜவான் ஆகியவற்றைத் தொடர்ந்து வளைகுடா பாக்ஸ் ஆபிஸில் $1 மில்லியன் வசூல் செய்த இந்த ஆண்டு 4வது இந்தியத் திரைப்படம் இதுவாகும். ஷாருக்கானின் ஜவான் மற்றும் பதான் முறையே $1.77 மில்லியன் மற்றும் $1.62M பெற்று முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.  ரஜினியின் ஜெயிலர் 1.17 மில்லியன் டாலர்களை வசூலித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. லியோ தற்போது 1.06 மில்லியன் டாலர்களை குவித்து நான்காவது இடத்தில் உள்ளது.  ரிலீஸுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், லியோ அந்த மூன்று படங்களையும் முறியடித்து வளைகுடாவில் மிகப்பெரிய படமாக வெளிவரும்.

அதிக டிக்கெட் விற்பனை

புக்மை ஷோவில் டிக்கெட் விற்பனை அதிக அளவில் உள்ளது.  அக்டோபர் 14 அன்று காலை 10 மணி முதல் 11 மணி வரையிலான ஒரு மணி நேரத்தில் புக்மை ஷோவில் லியோ படத்திற்கு 82,400 டிக்கெட்டுகள் விற்பனை ஆகி உள்ளது.  தென்னிந்தியத் திரையுலகில் ஒரு மணி நேரத்தில் எந்தப் படத்துக்கும் விற்பனையான அதிகபட்ச டிக்கெட் எண்ணிக்கை இதுவாகும். கடந்த 24 மணி நேரத்தில் 6.33 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  லியோ வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸை எகிற வைத்துள்ளது.  இப்படம் பிகில் படத்தை முறியடித்து, வெளிநாட்டில் வெளியீட்டிற்கு நான்கு நாட்களுக்கு முன்பே மிகப்பெரிய தொடக்க படமாக மாறியது. இதுவரை $4.87 மில்லியன் வசூலித்துள்ளது மற்றும் வெளிநாட்டில் கோலிவுட்டின் முதல் $7M ஓப்பனராக இருக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

மேலும் படிக்க | அடேங்கப்பா செம வெயிட் பார்ட்டி தா.. அனிருத் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News