இந்த ஐந்து காரணத்திற்காக 'ஸ்வீட் காரம் காஃபி' வெப் சீரிஸை கட்டாயம் பாருங்க

நுட்பமான கதாபாத்திரங்கள்... மனதிற்கு இதமான இசை... மறக்க முடியாத சாலை பயணம்... பிரைம் வீடியோவில் அசல் தமிழ் இணைய தொடரான 'ஸ்வீட் காரம் காஃபி'யை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டியதன் ஐந்து காரணங்கள் இதோ...!

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 7, 2023, 01:18 PM IST
  • 'ஸ்வீட் காரம் காஃபி' ஒரு நல்ல கதை மட்டும் அல்ல. இந்திய அளவிலான பார்வையாளர்கள் அனைவரையும் தொடர்புப்படுத்திக்கொள்ளக்கூடிய படைப்பு.
  • 'ஸ்வீட் காரம் காஃபி' எனும் இணைய தொடரின் இசை ஆல்பம் அண்மையில் வெளியிடப்பட்டது.
இந்த ஐந்து காரணத்திற்காக 'ஸ்வீட் காரம் காஃபி' வெப் சீரிஸை கட்டாயம் பாருங்க title=

நண்பர்களுடன் சாலை மார்க்கமான பயணத்தை மேற்கொள்வது என்பது நாம் அனைவரும் விரும்பி காணும் ஒரு சினிமாவை போன்றது. ஏனெனில் நாம் அனைவரும் அவர்களின் இடத்தில் இருக்க விரும்புகிறோம். ஆனால் மூன்று தலைமுறைகளுக்கு இடையேயான பெண்கள், தங்களை கண்டறியவும்.. தங்கள் வாழ்க்கையை புதிய கண்ணோட்டத்தில் ஆராயவும்.. ஒன்றாக பயணம் செய்கிறார்களா? இது எப்போதாவது கேள்விப்படும் ஒரு விசயம். பிரைம் வீடியோவில் வெளியாகவிருக்கும் தமிழ் ஒரிஜினல் தொடர்பான 'ஸ்வீட் காரம் காஃபி' இது போன்ற சாகசத்தையும், தன்னுணர்தலையும் பற்றிய கதையாகும். வயதுவரம்பற்ற... உண்மையான.. தனித்துவமிக்க வருங்காலத்தின் கதை...! இவை பொருத்தமானதாக இல்லை என்றால் 'ஸ்வீட் காரம் காஃபி' எனும் இணைய தொடரை காண்பதற்கு மேலும் ஐந்து காரணங்களை கீழே காணலாம். தவறாமல் இந்த வார இறுதியில் பார்த்து ரசியுங்கள்.!

நட்சத்திர நடிகர்கள்

நடிகைகள் லட்சுமி மற்றும் மது போன்ற அனுபவம் மிக்க நட்சத்திர நடிகைகள், பல ஆண்டுகளாக வணிக சினிமாவில் நடித்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்திருப்பவர்கள்‌. இவர்கள் இயல்புக்கு மீறிய.. வழக்கத்துக்கு மாறான கதாபாத்திரங்களில் நடிப்பதை பார்ப்பது என்பது .. திறமையான கலைஞர்கள் என்ற வகையில் அவர்கள் மீதான மரியாதையை அதிகரிக்கும். இதையும் கடந்து, எல்லைகளை தாண்டி பரந்துபட்ட பார்வையாளர்களை சென்றடைய வேண்டிய தனித்துவமான கதைகளை விவரிக்கும் 'ஸ்வீட் காரம் காஃபி' போன்ற இணைய தொடர்களில் நடித்திருப்பதால் அதன் தரமும், சுவையும் உயர்கிறது. லட்சுமி நடித்திருக்கும் ஜூலி படத்தினை போல்.. மது நடித்திருக்கும் ரோஜா படத்தை போல்.. பரவலாக விரும்பப்படும் கதாபாத்திரங்களில் இவர்கள் நடித்திருப்பதால், இந்த இணையத்தொடரை காணும் ஆவல் நிச்சயம் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | தன்னைவிட 6 வயது கம்மியான ஹீரோவுக்கு ஜோடியாகும் திரிஷா!

பெண்களின் கோணம்

சுந்தரி ( லட்சுமி), காவேரி ( மது), நிவேதிதா ( சாந்தி) என பாட்டி, தாய் மற்றும் மகள் ஆகிய மூவரும் ஆணாதிக்கத்துடன் தினமும் போராடுகிறார்கள். சுந்தரியின் வழக்கத்திற்கு மாறான ஆசைகள்... தன்னையே அதிகமாக நேசிக்கும் காவேரி... தொழில் மீது பேரார்வத்தை செலுத்தும் நிவேதிதா.. என எதுவாக இருந்தாலும் சரி இவை மூன்றுமே நம்முடைய சமூகத்திற்கு ஏற்றதாக இல்லை என்பதால், நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்து ஏராளமான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இந்த மூன்று பெண்களின் எளிய தேவைகள் சமூகத்தால் நிராகரிக்கப்படும் போது, அவர்கள் உண்மையிலேயே தகுதியான சுதந்திரத்தையும்.. இடத்தையும் வழங்குவதற்கு நம் உலகம் இன்னும் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும் என்பதனை நாம் உணர்கிறோம். 

மனதை மயக்கும் இசை

'ஸ்வீட் காரம் காஃபி' எனும் இணைய தொடரின் இசை ஆல்பம் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த ஆல்பம்- பாடல்களும், இசைக்கருவிகளின் ஊடான கருத்துரு இசையும் கலந்த கலவையாகும். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்த இந்த ஆல்பத்தில் பிரபல பாடர்களான ஜாவேத் அலி, ஆதித்யா ராவ், கபில் கபிலன், கீர்த்தனா வைத்தியநாதன் மற்றும் சத்ய பிரகாஷ் உள்ளிட்ட பாடகர்கள் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஆன்மாவை தூண்டும் இசையுடன் இனிமையான பாடல்கள் இடம்பெற்றிருப்பது நம்முடைய செவிகளுக்கு சிறந்த விருந்தாகும்.

தங்களை தாங்களே கண்டறிந்து கொள்ளும் கசப்பான பயணம்

 'ஸ்வீட் காரம் காஃபி' ஒரு நல்ல கதை மட்டும் அல்ல. இந்திய அளவிலான பார்வையாளர்கள் அனைவரையும் தொடர்புப்படுத்திக்கொள்ளக்கூடிய படைப்பு. கதையின் ஆழம்.. நுட்பமான கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் பயணம் ..வெளிப்புறமாகவும், உள்ளார்ந்தும் உள்ளது. சுந்தரி, காவேரி மற்றும் நிவேதிதா ஆகியோர் எதிர்கொள்ளும் சவால்களில் நியாயமான பங்களிப்பை கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களது வாழ்க்கைக்கான பற்றுக்கோடும்.. ஆர்வமும்.. இந்த போராட்டங்களை எதிர்கொள்வதற்கான அவர்களிடம் மன உறுதியை வெளிப்படுத்துகிறது. அவர்கள் எதிர்கொள்ளும் சாகசம்.. பார்வையாளர்களான உங்களை காந்தம் போல் ஈர்க்கிறது. 

மூன்று தலைமுறைகளுக்கிடையேயான கதை

வெவ்வேறு தலைமுறைகளை சார்ந்த மூன்று பெண்கள்.. ஆணாதிக்கம் மிகுந்த இந்த சமூகத்தில் அவர்களுக்கு எதிராக, தங்கள் வாழ்வில் இணையாக செயல்படுவதை பார்க்கும் போது புத்துணர்வு கிடைக்கிறது. 'ஸ்வீட் காரம் காஃபி: ஒவ்வொரு வயதுடைய பெண்கள்.. அவர்களின் வயதை மீறி எப்படியெல்லாம் வாழ்கிறார்கள்.. வாழ்க்கையை எப்படி காதலிக்கிறார்கள்.. அவர்களின் கதைகளை எப்படியெல்லாம் சொல்வதற்கும், கேட்பதற்கும் ஏற்றவை என்ற சாராம்சத்தை கொண்டிருப்பதால், இது இந்த இணைய தொடர் உங்களை எளிதாக இணைத்துக் கொள்கிறது. இந்தத் தொடர் உங்களை சுற்றியுள்ள பெண்களின் யதார்த்த வாழ்வியலை பிரதிபலிப்பதால்.. இதனை காணும் போது உங்களுடைய இதயம் கனக்கிறது. 

லயன் டூத் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் எனும் பட நிறுவனம் சார்பில் ரேஷ்மா கட்டாலாவின் உருவாக்கத்தில் தயாராகி இருக்கும் இதயத்தை வருடும் இந்த இணைய தொடரை, இயக்குநர்கள் விஜய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். இந்த இணைய தொடரின் லட்சுமி, மது, சாந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். உலகெங்கிலும் உள்ள 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பிரைம் உறுப்பினர்கள் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு, தமிழில் இன்று வெளியானது.

மேலும் படிக்க | தனுஷின் 50வது படத்தில் இணைந்த காளிதாஸ் ஜெயராம்.. ஷூட்டிங் ஆரம்பம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News