பீட்ஸா 3 to பேபி..ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகும் படங்கள்..! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்..?

இந்தியாவின் பிரபலமான தளங்களான நெட்ஃப்ளிக்ஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற தளங்களில் பல படங்கள் இந்த வாரம் ரிலீஸாகின்றன. அதன் முழு விவரம் இதோ.   

Written by - Yuvashree | Last Updated : Aug 23, 2023, 03:54 PM IST
  • இந்த வாரம் ஓடிடியில் பல படங்கள் வெளியாகின்றன.
  • பீட்ஸா 3 முதல் பேபி படம் வரை பல படங்கள் லிஸ்டில் உள்ளன.
  • எந்தெந்த படத்தை எந்தெந்த தளத்தில் பார்க்கலாம்..? இதோ முழு விவரம்.
பீட்ஸா 3 to பேபி..ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகும் படங்கள்..! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்..?  title=

வாரா வாரம் குடும்பத்துடன் அனைவரும் திரையரங்கிற்கு சென்று படம் பார்க்கும் காலம் மலையேறி விட்டது. பல படங்கள் ஓடிடி தளங்களிலேயே வெளியாவதால் மக்கள் பலர் வீட்டில் அமர்ந்தபடியே படங்களை பார்த்து வருகின்றனர். இந்தியாவில் ஜீ 5, நெட்ஃப்ளிக்ஸ், ஜியோ சினிமா, அமேசான் ப்ரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார் போன்ற தளங்கள் பிரபலமான ஓடிடி தளங்களாக விளங்குகின்றன. இந்த தளங்களில் அடிக்கடி பல படங்களும் தொடர்களும் வெளியாகும். அந்த வகையில் இந்த வாரம் எந்தெந்த தளங்களில் எந்தெந்த படங்களையும் தொடர்களையும் பார்க்கலாம் என்பதை பார்ப்போமா..? 

பீட்ஸா 3:

மோகன் கோவிந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பட்ம, பீட்ஸா 3:தி மம்மி.  இதில், அஷ்வின், சுபிக்‌ஷா, குரோஷி, பவித்ரா மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஆகஸ்டு 25ஆம் தேதி முதல் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் காணலாம். 

பிளாக் அண்ட் வைட்:

சின்னத்திரை நடிகர் கார்த்திக் ராஜ் நடித்துள்ள படம், பிளாக் அண்ட் வைட். கொரோனா காலத்தில் ஒரு குடும்பம் சந்தித்த இழப்பையும் அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வந்தனர் என்பதையும் விவரிக்கும் வகையில் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படம், நேரடியாக ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பப்பட்டது, தற்போது ஜீ 5 தளத்தில் வரும் வெள்ளிக்கிழமையன்று இந்த படத்தை வெளியிட உள்ளனர். 

மேலும் படிக்க | “ரஜினிக்கே 6 படங்கள் தோல்விதான்..” சர்ச்சையில் மாட்டிக்கொண்ட விஜய் தேவரகொண்டா..!

பேபி:

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவின் சகோதரர் ஆனந்த் தேவரகொண்டா நடித்துள்ள படம், ‘பேபி’. இந்த படத்தில் வைஷ்னவி சைதன்யா கதாநாயகியாக் நடித்திருக்கிறார். இந்த படத்தை ஆஹா தளத்தில் ஆகஸ்டு 25ஆம் தேதி முதல் பார்க்கலாம். குறிப்பாக ஆஹா கோல்டு மெம்பர்ஷிப் வைத்துள்ளவர்கள் இந்த படத்தின் ரிலீஸிர்கு 12 மணி நேரம் முன்னதாகவே பார்க்கலாம். 

ப்ரோ:

தமிழில் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்ற படம் ‘விநோதய சித்தம்’ இந்த படத்தின் தெலுங்கு ரீ-மேக் ஆக உருவாகியிருக்கிறதி ப்ரோ திரைப்படம். இதில் பவன் கல்யாண், சாய் தரம் தேஜ், ப்ரியா ப்ரகாஷ் வாரியர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமுத்திரகனி இந்த படத்தை இயக்கி இருக்கிறார். திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இந்த படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறார். இந்த படத்தை வரும் 25ஆம் தேதி முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம். 

குருக்கன்:

பிரபல மலையாள நடிஅக்ர் வினீத் ஸ்ரீநிவாசன் நடித்துள்ள படம், குருக்கன். காமெடி க்ரைம் த்ரில்லர்களுக்கு என பல லட்சம் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த படம் அது போல காமெடி க்ரைம் த்ரில்லர் பாணியில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சிம்ளி சவுத் தளத்தில் நாளை மறுநாள் (ஆகஸ்டு 25) முதல் பார்க்கலாம். 

ஃபாதர் ஸ்டு:

கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ஃபாதர் ஸ்டு. இதில் மார்க் வால்ஸ்பெர்க், ஜாக்கி வீவர், மெல் கிப்ஸன் ஆகியோர் நடித்துள்ளனர். ஆங்கில மொழியில் உருவாகியுள்ள இந்த படத்தை சோனி லிவ் தளத்தில் ஆகஸ்டு 25ஆம் தேதி முதல் காணலாம். 

பிற ஓடிடி ரிலீஸ்கள்:

மேற்கூறியவை மட்டுமல்லாமல் வேறு சில படங்களும் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. அவை என்னென்ன தெரியுமா..? 

>பார்துடு-தெலுங்கு-ஈடிவி வின்
>ஆச்சார் அண்ட் கோ-கன்னடம்-அமேசான் ப்ரைம்
>அசோகா சீசன் 1-ஹாட்ஸ்டார் 
>ஆக்ரி சாஷ்-இந்தி-ஹாட்ஸ்டார்
>தி ரவுண்ட் அப் 2-கொரியன்-அமேசான் ப்ரைம்
>சீதா பாலகிரிஷ்ணா-தெலுங்கு-ஹங்காமா ப்ளே
>மதுரா மனோஹர மோஹம்-மலையாளம்-ஹெச்.ஆர் ஓடிடி
>மைக்கேல்ஸ் காஃபி ஹவுஸ்-மலையாளம்-ஹெ.ஆர் ஓடிடி
>ஓனம் சாக்‌ஷி பார்த்தேன்-மலையாளம்-சாய்னா ப்ளே

மேலும் படிக்க | விண்வெளி அறிவியல் குறித்து வெளியான இந்திய படங்கள்: டாப் லிஸ்டில் தமிழ் படம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News