இன்று முதல் “நாச்சியார்” படத்தின் ட்ரைலர்!

இன்று வெளியாகிறது “நாச்சியார்” ட்ரைலர். 

Updated: Jan 13, 2018, 11:27 AM IST
இன்று முதல் “நாச்சியார்” படத்தின் ட்ரைலர்!
ZeeNewsTamil

இயக்குனர் பாலா படத்தில் நடிகை ஜோதிகா முதன் முதலாக நடிப்பதாக சில நாட்களுக்கு அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு நாச்சியார் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். 

முன்னதாக இப்படத்தின் இரண்டு போஸ்டர்களும்  ஃபர்ஸ்ட் லுக் மோஷன் டைட்டிலும் வெளியானது. இந்நிலையில் நவம்பர்-15 நடிகர் சூர்யா இப்படத்தின் டீசரை வெளியிட்டார்.இப்படம் டீசர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து சில சர்சைகளுக்கும் உள்ளானது. இதையடுத்து, இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாவதாக அதிகாரபூர்வமான படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.