’தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் அப்டேட்ஸ்- பார்க்க!

Last Updated : Sep 18, 2017, 09:25 AM IST
’தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் அப்டேட்ஸ்- பார்க்க! title=

சூர்யா, கார்த்திக், கீர்த்தி சுரேஷ், சுரேஷ் மேனன், ரம்யா கிருஷ்ணன், செந்தில் உட்பட பலர் நடிக்கும் படம், ’தானா சேர்ந்த கூட்டம்’. ’நானும் ரவுடிதான்’ பட ஹிட்டுக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். ஆக்‌ஷன் காமெடி படமான இதை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. 

இந்நிலையில் இப்படத்தின் 2-வது சிங்கிள், டீசர், டிரைலர் மற்றும் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

 

 

அன்பான ரசிகர்கள் ஆசைப்பட்டதால் `தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் 2வது சிங்கிள் அக்டோபர் மாதமும், நவம்பரில் டீசரும், இசை வெளியீடு மற்றும் டிரைலர் டிசம்பரில் நடக்க இருக்கிறது. இதற்கிடையே இப்படத்தின் பாடல்கள் வெளியாகும்.

அதனைத் தொடர்ந்து படம் வருகிற பொங்கல் பண்டிகையின் போது வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார். 

Trending News