ஃபஹத் பாசில் - வடிவேலு இணையும் புதிய படம்! அதிகார்வப்பூர்வ அறிவிப்பு!

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரியின் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஃபஹத் பாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கின்றனர்.  

Written by - RK Spark | Last Updated : Jan 1, 2024, 02:40 PM IST
  • ஃபஹத் பாசில் - வடிவேலு புதிய படம்.
  • சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
  • மலையாள இயக்குனர் இந்த படத்தை இயக்குகிறார்.
ஃபஹத் பாசில் - வடிவேலு இணையும் புதிய படம்! அதிகார்வப்பூர்வ அறிவிப்பு! title=

புத்தாண்டையொட்டி இன்று ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தங்களின் 98வது படத்தை அறிவித்துள்ளது.  இந்த படத்தில் ஃபஹத் பாசில் மற்றும் வடிவேலு முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.  இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் முதல் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.  இதில் நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் போஸ்டரின் ஓரத்தில் ஒரு குறுகிய சாலையும் காணப்படுகிறது.  இந்த திரைப்படத்தை மலையாள திரைப்பட இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்குகிறார். அவர் பல தொலைக்காட்சி தொடர்களையும் அதே போல் வேனல் கினவுகள் (1991), ஆறுமணமே (2009) மற்றும் வில்லாலி வீரன் (2014) போன்ற சில படங்களையும் இயக்கியுள்ளார்.

மேலும் படிக்க | புத்தாண்டுக்கு ஒளிபரப்பாகும் புது படங்கள்! எந்த சேனலில் எதை பார்ப்பது?

படத்தின் கதைக்களம் பற்றிய விவரங்கள் இன்னும் அறியப்படாத நிலையில், கலைசெல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்கிறார்.  2022ல் வெளியான போர் தோழில் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பைக் கையாள்வார் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினின் நடித்த மாமன்னன் படத்தில் ஃபஹத் மற்றும் வடிவேலு இணைந்து நடித்து இருந்தனர். இந்த கூட்டணி புதிதாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.  

வடிவேலு கடைசியாக சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து இருந்தார்.  இந்த படம் கடந்த செப்டம்பர் 28 அன்று வெளியானது.  வடிவேலு சந்திரமுகியின் முதல் பாகத்தில் நடித்து இருந்த முருகேசன் என்ற அதே கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.  ஆனால் இந்த படம் ரசிகர்களை கவரவில்லை.  மறுபுறம், ஃபஹத் பாசில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பாடு, இயக்குனர் சுகுமாருடன் புஷ்பா 2 தி ரூல் மற்றும் இயக்குனர் ஜித்து மாதவனுடன் ஆவேசம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் படிக்க | தெலுங்கிற்கு ஒரு பாகுபலி! தமிழுக்கு ஒரு அயலான் - தயாரிப்பாளர் ராஜேஷ் பேச்சு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News