பின் வாங்கம் சிவகார்த்திகேயன், கெத்தாக களமிறங்கும் விஜய் சேதுபதி

Last Updated : Sep 11, 2017, 03:44 PM IST
பின் வாங்கம் சிவகார்த்திகேயன், கெத்தாக களமிறங்கும் விஜய் சேதுபதி title=

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேலைக்காரன்’. இந்த படம் வரும் 29-ம் தேதி வெளியாகாது என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பன்’ படத்தை அதே தேதியில் வெளியிட போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மோகன் ராஜ இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் ‘வேலைக்காரன்’ படம் வரும் 29-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் படத்தின் பின்னனி வேலைகள் முடியாததால் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பன்’ இந்த தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தன்யா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Trending News