விஜய்க்கு துரோகம் செய்த திரிஷா? ஒரு போட்டோவால் சிக்கிக்கொண்ட அவலம்!

விஜய் - திரிஷா குறித்த மீம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. விஜய்க்கு திரிஷா துரோகம் செய்துவிட்டதாக ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.  

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Aug 29, 2023, 03:40 PM IST
  • 14 ஆண்டுகளுக்குப்பிறகு விஜய் - திரிஷா காம்போ
  • ரோலெக்ஸ் ரோலில் சூர்யா நடித்து மிரட்டியிருப்பார்
  • திரிஷா லியோ படத்தில் விஜய்க்கு துரோகம் செய்வார்
விஜய்க்கு துரோகம் செய்த திரிஷா? ஒரு போட்டோவால் சிக்கிக்கொண்ட அவலம்!  title=

கண்டெண்ட் எதுவும் சிக்கவில்லை என்றால், கிடைத்ததை எல்லாம் கண்டெண்ட் ஆக்குவது தான் தற்போதைய மீம் கிரியேட்டர்களின் வேலையாக மாறிவிட்டது. அப்படி சிக்கிய திரிஷா போட்டோவை வைத்து ஒரு பூகம்பத்தையே ஏற்படுத்தி வருகின்றனர். 

லியோ படத்தில் கிட்டதட்ட 14 ஆண்டுகளுக்குப்பிறகு விஜய் - திரிஷா காம்போ இணைந்துள்ளது. இவர்கள் கடைசியாக கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ஆதி படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர். அதன்பிறகு இவர்கள் ஒன்றாக நடிக்கவில்லை. இந்த சூழலில் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் இந்த கூட்டணி இணைந்தது. 

மேலும் படிக்க | ஜெயிலரில் ஆர்சிபி ஜெர்ஸி... கேஸ் போட்ட நிர்வாகம் - அடிபணிந்த சன் பிக்சர்ஸ்!

லியோ படம் கேங்ஸ்டர் கதை என்பதால், திரிஷாவின் ரோல் வெயிட்டாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏற்கனவே லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் குறித்து ரசிகர்கள் இன்ச் பை இன்ச் படத்தின் டீசர், பாடல்களை வைத்து பல கதைகளை கூறி வருகின்றனர். விக்ரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரோலெக்ஸ் ரோலில் சூர்யா நடித்து மிரட்டியிருப்பார். ரோலெக்ஸ் போட்டிருந்த தேள் டாட்டூவை வைத்து லியோ டீசரில் ஒரு சீனில் தேள் சிம்பிள் வந்ததை வைத்து ரோலெக்ஸின் அண்ணன் தான் லியோ என எல்லாம் கதை கட்டினர். 

அந்த வகையில் தற்போது ரோலெக்ஸ், திரிஷா கூட்டாளிகள் என்றும், திரிஷா லியோ படத்தில் விஜய்க்கு துரோகம் செய்வார் என்றும் கூறி ஒரு மீமை ஷேர் செய்து வருகின்றனர். திரிஷா கையில் இருக்கும் டாட்டூவை குறிப்பிட்டு இது ரோலெக்ஸ் போட்டிருந்த டாட்டூ என்று கூறி வருகின்றனர். இதனால் இவர்கள் கூட்டாளிகள் என்பதால் விஜய்க்கு வில்லியாக திரிஷா நடித்திருப்பார் என்றும் பேசி வருகின்றனர். படம் வருவதற்குள் கதை என்ற பெயரில் ஒட்டு மொத்த கிரியேட்டிவிட்டியையும் மீம் கிரியேட்டர்கள் இறக்கி வருகின்றனர்.

மேலும் படிக்க | மாமியார் ராஜேஸ்வரி நெஞ்சுவலியால் மருத்துவனையில்! சிகிச்சையளிப்பாளா ஷன்மதி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News