விவேகம்: ஹெலிகாப்டருடன் அஜீத் புதிய படம் வெளியீடு!

Updated: Apr 21, 2017, 04:48 PM IST
விவேகம்: ஹெலிகாப்டருடன் அஜீத் புதிய படம் வெளியீடு!
Pic Grab :Youtupe

‘விவேகம்’ படத்தில் மற்றொரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜீத் தற்போது ‘விவேகம்’ படத்தின் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபகாலமாக வாரம் வாரம் புதிய அஜீத் புகைப்படங்கள் வெளிவர தொடங்கியுள்ளன. அந்த வகையில் இன்று அஜீத் ஹெலிகாப்டருடன் நிற்கும் புதிய புகைப்படம் வெளியாகி சமுகவலைத்தளத்தை கலக்கி வருகிறது.

ஏற்கனவே இயக்குனர் வெளியிட்ட 'விவேகம்' திரைப்பட போஸ்டரில் அஜித்தின் வலிமையான உடற்கட்டை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் இந்தியளவில் டாப் டிரண்டானது. 

அதைத் தொடர்ந்து வெளியான அடுத்தடுத்த போஸ்டர்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் டீசர் தல அஜித்தின் பிறந்தநாளான மே 1-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.