புதிதாக சொகுசு கார் வாங்கிய VJ அர்ச்சனா! இதன் விலை இவ்வளவா?

VJ Archana Mercedes Benz Car Price : தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜே அர்ச்சனா, புதிதாக ஒரு கார் வாங்கியிருக்கிறார். இந்த காரின் விலை என்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Apr 1, 2024, 07:34 PM IST
  • புது கார் வாங்கிய விஜே அர்ச்சனா
  • இதன் விலை இவ்வளவா?
  • வைரலாகும் அர்ச்சனாவின் எமோஷனல் வீடியோ!
புதிதாக சொகுசு கார் வாங்கிய VJ அர்ச்சனா! இதன் விலை இவ்வளவா?  title=

VJ Archana Mercedes Benz Car Price : தமிழில் உள்ள திறமையான நிகழ்ச்சி தொகுப்பாளர்களுள் ஒருவர், என்ற பெயரை பெற்றவர், விஜே அர்ச்சனா. முன்னர் நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்கி வந்த இவர், தற்போது சில படங்களில் துணை கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். 

புது கார் வாங்கிய அர்ச்சனா..

தற்போதுள்ள திரை பிரபலங்களும், சின்னத்திரை பிரபலங்கள் பலரும் விலை அதிகமுள்ள சொகுசு கார்களை வாங்கி வருவது வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் எதிர்நீச்சல் தாெடர் நடிகை மதுமிதாவும் அப்படியொரு காரை வாங்கினார். இந்த நிலையில், தற்போது விஜே அர்ச்சனாவும் ஒரு காரை வாங்கியிருக்கிறார். அது குறித்த வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார். 

வைரல் வீடியோ..

விஜே அர்ச்சனா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து அந்த காரை வாங்கியுள்ள காட்சிகள் வைரலாகி வருகிறது. சுமார் 1 நிமிடம் வரும் வரை அந்த வீடியோவில் அர்ச்சனா காரின் சாவியை வாங்குவது, பின்னர் எமோஷனல் ஆகி கதறி அழுவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது. 

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

மேலும் படிக்க | 1 நாளில் 2 கிலோ எடை குறைக்கலாம்! VJ ரம்யா கூறும் டிப்ஸை கேளுங்க..

காரின் விலை..

விஜே அர்ச்சனா வாங்கியுள்ள காரின் பெயர், மெர்சிடீஸ்-பென்ஸ் ஜிஎல்சி என்ற காரை வாங்கியிருக்கிறார். இதன் மார்கெட் விலை, தற்போது ஒரு கோடி ரூபாயாக இருப்பதாக கூறப்படுகிறது. அர்ச்சனா வெளியிட்டுள்ள வீடியோவில், அர்ச்சனாவின் மகளும் இடம் பெற்றிருக்கிறார். 

25 வருட உழைப்பு:

வி.ஜே அர்ச்சனா வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் பெரிய பேராகிராஃபையும் இணைத்திருக்கிறார். அதில்“நாம் ஒவ்வொரு நாளும் ஒரு கனவை நோக்கிதான் ஓடுகிறார். தான் கார் ஓட்ட கற்றுக்கொண்டதில் இருந்து தான் இந்த காரை ஓட்ட வேண்டும் என்று கணவு கண்டேன். 25 வருடங்களாக தான் மீடியாவில் இருந்த காலத்தில் 24 வருடங்கள் இந்த கணவை நோக்கிதான் ஓடினேன். இது என் கனவு மட்டுமல்ல, எனது தந்தையின் கனவும் கூட” என்று குறிப்பிட்டிருக்கிறார்.  மேலும், தன்னுடன் தன் வாழ்க்கையில் அனைத்து கால நிலைகளிலும் நின்ற ஆண்களுக்கு நன்றி என்றும் தெரிவித்திருக்கிறார். 

பிக்பாஸ் மூலம் கெட்டப்பெயர்..

தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளுள் ஒன்று, பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் விஜே அர்ச்சனா கலந்து கொண்டார். இதில் அவருக்கு அரந்தாங்கி நிஷா தோழியாக மாறினார். இந்த சீசன் பார்த்த பலர், இவருக்கு பல ரசிகர்கள் வந்தாலும் இவருக்கு பெரிய கெட்டப்பெயரும் கிடைத்தது. பின்னர், அவர் அந்த பெயர்களை தனது செயல்கள் மூலமாக மாற்றினார். இவர், சமீபத்தில் விஜே பிரியங்காவை அவர் எடுத்திருந்த நேர்காணல் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | அட்லீ-அல்லு அர்ஜுன் படத்தில் கதாநாயகி ‘இவர்’தான்! அட நம்ம ஊர் அழகி..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News