Nidahas_T20: இறுதிப்போட்டியில் இந்தியா-வங்காளதேசம் மோதல்!

இலங்கையில் நடந்து வரும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்தியா-வங்காளதேச அணிகள் இன்று இறுதிப்போட்டியில் மோதுகின்றன.

Last Updated : Mar 18, 2018, 11:24 AM IST
Nidahas_T20: இறுதிப்போட்டியில் இந்தியா-வங்காளதேசம் மோதல்! title=

இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெறும் முத்தரப்பு டி20 தொடர் கொழும்புவில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இன்று மோதுகின்றன.

முன்னதாக நேற்று முன்தினம் நடைப்பெற்ற 6 வது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின. வெற்றிப்பெறும் அணி மட்டுமே இறுதி ஆட்டத்திற்கு முன்னேறும் என்ற இக்கட்டாண நிலையில் களம் இரங்கிய இரண்டு அணிகளும் கடுமையான போட்டியினை வெளிப்படுத்தின. இப்போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று இறுதி ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொள்ள தயாராகியுள்ளது.

இதையடுத்து, இலங்கை பந்து வீச்சாளர் நோ பால் வீசியதாக இலங்கை வீரர்களுக்கும் வங்காளதேச வீரர்களுக்கும் இடையோ மோதல் ஏற்பட்டது. மேலும் ஆட்டத்தின் இடையில் தண்ணீர் கொடுக்க வந்த வங்கதேச வீரர் இலங்கை கேப்டனிடம் தவறாக பேசியதாகவும் சர்சைகள் கிளம்பியது. 

பின்னர், வங்காளதேச அணியின் தலைவர் ஷகிப் அல் ஹாசன் மற்றும்  நூருல் ஹசன் ஆகியோர் நடுவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ICC நடத்தை விதிமுறைகளை மீறியதாக வங்காளதேச கேப்டன் ஷகிப் அல் ஹாசன் மற்றும் நூருல் ஹாசன் ஆகியோருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ICC அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்த தொடரில் இறுதி ஆட்டம் இன்று நடக்க விருக்கிறது. சாம்பியன் கோப்பைக்கு இந்தியாவும், வங்காளதேசமும் மோதுகின்றன.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, லீக் சுற்றில் இரண்டு முறையும் (6 விக்கெட் மற்றும் 17 ரன் வித்தியாசம்) வங்காளதேசத்தை பின்னியெடுத்தது. இந்திய அணியை பொறுத்தவரை இந்த தொடரில் எல்லா வீரர்களும் ஓரளவு நன்றாக ஆடியிருக்கிறார்கள். 

கூட்டு முயற்சியின் செயல்பாடு, இறுதிப்போட்டியிலும் தொடருவது அவசியமாகும். பார்ம் இன்றி தவித்த கேப்டன் ரோகித் சர்மா முந்தைய ஆட்டத்தில் 89 ரன்கள் குவித்தது மகிழ்ச்சியான விஷயமாகும். இந்த ஆடுகளம் மந்தமான தன்மையுடன் இருப்பதால் சுழற்பந்து வீச்சாளர்கள் வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரின் பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், இரவு 7 மணிக்கு தொடங்கும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரினை டி ஸ்போர்ட் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News