ஆஸ்திரேலியாவில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு ‘குட் நியூஸ்’ வழங்கியுள்ள ஆஸ்திரேலியா!

இந்தியாவில் உள்ள ஆஸ்திரேலிய  தூதர் பேர் ஓ பேரல் ( Barry O'Farrell) ஆஸ்திரேலியாவில்,  ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் படித்து கொண்டே செய்யும் பகுதி நேர வேலைகளில் அதிகம் சேரும் இந்தியர்கள் உட்பட சர்வதேச மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் இருக்காது என உறுதி கூறியுள்ளார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 10, 2023, 07:42 PM IST
  • ஆஸ்திரேலியாவால் அறிவிக்கப்பட்ட படிப்புக்குப் பிந்தைய பணி விசா நீட்டிப்பும் மணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • ஜூலை முதல் சர்வதேச மாணவர்கள் படிக்கும் போது ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் 48 மணிநேரம் வரை வேலை செய்ய அனுமதிக்கும் வரம்பு.
  • இந்தியாவில் உள்ள கிளை வளாகங்களில் படிக்கும் மாணவர்கள் பட்டம் பெற்ற பிறகு ஆஸ்திரேலியாவில் வேலை வாய்ப்புகளைப் பெற வாய்ப்புள்ளது
ஆஸ்திரேலியாவில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு  ‘குட் நியூஸ்’ வழங்கியுள்ள ஆஸ்திரேலியா!  title=

இந்தியாவில் உள்ள ஆஸ்திரேலிய  தூதர் பேர் ஓ பேரல் ( Barry O'Farrell) ஆஸ்திரேலியாவில்,  ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் படித்து கொண்டே செய்யும் பகுதி நேர வேலைகளில் அதிகம் சேரும் இந்தியர்கள் உட்பட சர்வதேச மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் இருக்காது என உறுதி கூறியுள்ளார். “கோவிட் தொற்றுநோய் காரணமாக எங்கள் எல்லைகள் மூடப்பட்டபோது, விமான நிலைய பாதுகாப்புக் பணிகள், கார்னர் ஸ்டோர்கள் மற்றும் பல பகுதிகளில் வேலை செய்ய போதுமான அளவிற்கு ஆஸ்திரேலிய மக்கள் இல்லாத நிலையில்,  பல காலியிடங்கள் இருந்தன. பல சந்தர்ப்பங்களில், ஆஸ்திரேலியாவில் இருந்த இந்திய மாணவர்கள் அந்த வேலைகளைச் செய்தனர்.  இப்போது கூட, சர்வதேச மாணவர்கள் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் படிப்பதால் பகுதிநேர வேலை கிடைப்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது, ” என்று இந்தியாவில் உள்ள ஆஸ்திரேலிய தூதல் பாரி ஓ'ஃபாரெல் தெரிவித்தார். 

கடந்த ஆண்டு பிற்பகுதியில் சர்வதேச மாணவர்களுக்காக ஆஸ்திரேலியாவால் அறிவிக்கப்பட்ட படிப்புக்குப் பிந்தைய பணி விசா நீட்டிப்பும் மணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக அவர் கூறினார். "ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய மாணவர்கள், குறிப்பாக STEM (Science, technology, engineering, and mathematics) அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் கணித துறைகளில் உள்ளவர்கள், தங்கள் பட்டப்படிப்பு முடிந்த பிறகு, அவர்கள் படித்த  துறையில் பணிபுரிந்து, மதிப்புமிக்க பணி அனுபவத்தை சில ஆண்டுகள் பெறலாம்" என்று ஆஸ்திரேலிய தூதர் கூறினார். அனைத்து நாடுகளின் அரசாங்கங்களும் போட்டி நன்மைக்காக சிறந்த படிப்புக்குப் பிந்தைய பணி விசாக்களை வழங்க முயற்சிப்பதாக அவர் கூறினார்.

மேலும் படிக்க | NRI: பிரிட்டனில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்?

குறிப்பிடத்தக்க வகையில், இந்த ஆண்டு ஜூலை முதல் சர்வதேச மாணவர்கள் படிக்கும் போது ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் 48 மணிநேரம் வரை வேலை செய்ய அனுமதிக்கும் வரம்பு நிலையை ஆஸ்திரேலியா மீண்டு ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம், ஆஸ்திரேலிய அரசாங்கம், திறன் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் குறிப்பிட்ட பட்டப்படிப்புகளுடன் ஆஸ்திரேலியாவில் பட்டம் பெறும் சர்வதேச மாணவர்கள் நீட்டிக்கப்பட்ட படிப்பிற்கு பிந்தைய வேலை (PSW - post-study work ) உரிமைகளுக்கு தகுதியுடையவர்கள் என்று அறிவித்துள்ளது. நீட்டிக்கப்பட்ட PSW உரிமைகள் இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்களுக்கு நான்கு ஆண்டுகள் என்ற அளவில் இருக்கும்; முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு ஜூலை 2023 முதல் ஐந்து ஆண்டுகள் வழங்கப்படும்.

தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளைத் தொடும் எண்ணிக்கையுடன், அதிகமான இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் படிக்கும் விருப்பத்தைத் தேர்வுசெய்தாலும், இந்தியாவில் உள்ள ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களின் கிளை வளாகங்கள், ஸ்மார்ட் வணிக மாவட்டத்தில் உள்ள டீக்கின் பல்கலைக்கழகம் போன்றவை, குஜராத்தில் உள்ள GIFT சிட்டி, இந்திய மாணவர்களுக்கு ஆஸ்திரேலிய கல்வியைப் பெறுவதற்கும், படிப்பின் ஒரு பகுதியைப் படிப்பதற்கும் ஒரு விருப்பத்தை வழங்கும்  என்று ஓ'ஃபாரல் மேலும் கூறினார். 

"இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இப்போது கல்வித் தகுதிகளை பரஸ்பரம் அங்கீகரிப்பதால், இந்தியாவில் உள்ள கிளை வளாகங்களில் படிக்கும் மாணவர்கள் பட்டம் பெற்ற பிறகு ஆஸ்திரேலியாவில் வேலை வாய்ப்புகளைப் பெற வாய்ப்புள்ளது," என்று அவர் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் பயிலும் சிறந்த இந்திய மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆஸ்திரேலிய அரசாங்கம் சமீபத்தில் அறிவித்த மைத்ரி பெல்லோஷிப் திட்டம், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் புகழ்பெற்ற ரோட்ஸ் மற்றும் ஃபுல்பிரைட் உதவித்தொகைகளின் ஆஸ்திரேலிய பதிப்பாக வெளிவர வாய்ப்புள்ளது என்றும் ஆஸ்திரேலிய தூதர் கூறினார்.

மேலும் படிக்க | டாலர் கனவு படுத்தும் பாடு! அமெரிக்க சட்ட விரோதமாக நுழைய முயன்ற இரு NRI கைது! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News