இலங்கையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு; முழு விபரம்

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலையில், அதிபர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில், முன்னாள் அமைச்சர்களுடன் முக்கிய கூட்டம் ஒன்று கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்றது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 18, 2022, 12:02 PM IST
இலங்கையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு; முழு விபரம் title=

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலையில், அதிபர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில், முன்னாள் அமைச்சர்களுடன் முக்கிய கூட்டம் ஒன்று கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்றது. நாமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச, ஷசிந்திர ராஜபக்ச ஆகியோர் அமைச்சக பொறுப்புகளை பொறுப்புக்களை ஏற்க கூடாது என தீர்மானம் எட்டப்பட்டது.

இந்நிலையில், கூட்டத்தின் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் புதிய அமைச்சரவை  இன்று பதவி ஏற்கிறது. இலங்கையில் 17 பேர் கொண்ட புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாண நிகழ்வு தற்போது அதிபர் மாளிகையில் இடம் பெற்று வருகின்றது.

இதில், புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில்,

 1. தினேஷ் குணவர்தன – பொது நிர்வாகம், உள் விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி.

 2. டக்ளஸ் தேவானந்தா – கடல் வர்த்தகம்

 3. கலாநிதி ரமேஷ் பத்திரன – கல்வி மற்றும் தோட்டத் தொழில்கள்

மேலும் படிக்க | Srilanka Crisis: IMF உடன் பேச்சுவார்த்தை நடந்த இலங்கை நிதி அமைச்சர் அமெரிக்கா பயணம்

 4. பிரசன்ன ரணதுங்க - பொது பாதுகாப்பு & சுற்றுலா

 5. திலும் அமுனுகம – போக்குவரத்து மற்றும் கைத்தொழில்

 6. கனக ஹேரத் – நெடுஞ்சாலைகள்

 7. விதுர விக்கிரமநாயக்க – தொழிலாளர்

 8. ஜனக வக்கும்புர – விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம்

மேலும் படிக்க |  Srilanka Crisis: வரும் நாட்களில் வரிகள் மேலும் உயரும்; இலங்கை நிதி அமைச்சர் கொ

 9. ஷெஹான் சேமசிங்க – வர்த்தகம் மற்றும் தொழில் மேம்பாடு

 10. மொஹான் பிரியதர்ஷன டி சில்வா – நீர் வழங்கல்

 11. விமலவீர திஸாநாயக்க – வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு

 12. காஞ்சனா விஜேசேகர – சக்தி மற்றும் ஆற்றல்

 13. தேனுக விதானகமகே -விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்

 14. கலாநிதி நாலக கொடஹேவா – ஊடகம்

 15. பேராசிரியர் சன்ன ஜயசுமண – சுகாதாரம்

 16. நசீர் அகமது - சுற்றுச்சூழல்

 17. பிரமித பண்டார தென்னகோன் – துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து

மேலும் படிக்க | பணக்காரனா நீ? வரி கட்டு! செல்வந்தர்களுக்கு வரி விதிக்கும் இலங்கை

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News