தமிழக மீனவர்களின் படகுகளை அரசுடைமையாக்கிய இலங்கை நீதிமன்றம்! மீனவர்கள் அதிர்ச்சி!

தமிழக மீனவர்களின் 3 படகுகளை இலங்கை அரசுடைமையாக்கி அந்நாட்டு கோர்ட்டு உத்தரவினால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 28, 2023, 05:54 PM IST
  • படகுகள் மீதான விசாரணையானது யாழ்ப்பாணம் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
  • 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் மீன்பிடிக்க சென்ற 17 மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டன.
தமிழக மீனவர்களின் படகுகளை அரசுடைமையாக்கிய இலங்கை நீதிமன்றம்! மீனவர்கள் அதிர்ச்சி! title=

தமிழக மீனவர்களின் 3 படகுகளை இலங்கை அரசுடைமையாக்கி அந்நாட்டு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்த சம்பவம் தமிழக மீனவர்களுடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் உள்ளிட்ட தமிழக பகுதிகளில் இருந்து கடந்த 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் மீன்பிடிக்க சென்ற 17 மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டன. இந்த படகுகள் மீதான விசாரணையானது யாழ்ப்பாணம் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 17 படகுகள் மீதான விசாரணைக்காக ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜராக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் 14 பேர் கொண்ட மீனவர் குழுவினர் யாழ்ப்பாணம் சென்றனர். அந்த மீனவர்கள் நேற்று ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

அப்போது மொத்தம் 17 படகுகளில், 4 படகுகள் மீதான விசாரணை முடிந்த நிலையில் இதற்கான தீர்ப்பு வருகிற 31-ந் தேதி பிறப்பிக்கப்படும் என்றும், 10 படகுகள் மீதான வழக்குகளை மார்ச் 1-ந்தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும், 3 விசைப்படகுகளை இலங்கை அரசுடைமை ஆக்குவதாகவும் நீதிபதி கஜநிதிபாலன் உத்தரவிட்டார். தமிழகத்தைச் சேர்ந்த 3 மீன்பிடி விசைப்படகுகள் இலங்கையின் அரசுடைமையாக்கப்பட்டது, தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | இலங்கையில் கடும் பஞ்சம்: கை குழந்தையுடன் இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம்

இது குறித்து இங்கிருந்து படகுகளின் வழக்குகளில் ஆஜராகச் சென்ற ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜா கூறுகையில், தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க |  இலங்கை கடற்படையால் இராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு வைகோ கண்டனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News