இலங்கை தமிழர்களுக்கு உதவ நேரடியாக களமிறங்கிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில் அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களின் நிலை குறித்து அறிவதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை சென்றுள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 1, 2022, 11:29 AM IST
  • அண்ணாமலை 4 நாட்கள் பயணமாக இலங்கைக்கு சென்றுள்ளார்.
  • மே தினத்தை தொழிலாளர் தினம் சிறப்பாக கொண்டாடப்படும்.
  • இலங்கை அரசியலில் புதிய பரபரப்பு
இலங்கை தமிழர்களுக்கு உதவ நேரடியாக களமிறங்கிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை title=

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் நாடாளுமன்ற எம்.பியுமான ஜீவன் தொண்டமான் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய பா.ஜ.க கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலை 4 நாட்கள் பயணமாக இலங்கைக்கு சென்றுள்ளார்.

இலங்கையில் இன்று நடைபெறும் தேயிலை தொழிலாளர்களின் மாநாட்டில் அவர் பங்கேற்று உரையாற்ற உள்ளார். அதைத் தொடர்ந்து, இலங்கை சென்று வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இந்தியா சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள வீடுகளை பார்வையிடுகிறார். அங்குள்ள தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொள்கிறார்.

மேலும் படிக்க | போர் என்பது 21ம் நூற்றாண்டில் மிகவும் அபத்தமானது: ஐநா தலைவர் அன்டோனியோ குட்டரெஸ்

தொடர்ந்து, தமிழர் வாழும் பகுதிகளுக்கு சென்று தமிழ் மக்களின் கோரிக்கை, குறைகளை கேட்டறிய உள்ளார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, வரும் 4-ம் தேதி இலங்கையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

இதற்கிடையில் நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை நுவேரா எலியா மாவட்டத்தில் அமைந்துள்ள சீதை கோவிலில் தரிசனம் செய்தார். மேலும் கோவிலை குறிப்பிட்டு இந்தியா மற்றும் இலங்கையின் வரலாறு, நாகரீகம் ஒரே நேர்கோட்டில் பயணித்துள்ளது என தெரிவித்துள்ளார். இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. உணவு, பெட்ரோல், டீசல் உள்பட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. உணவு, பெட்ரோல், டீசல் உள்பட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். 

இந்த நிலையில் ஆண்டு தோறும் மே தினத்தை தொழிலாளர் தினம் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் செல்ல முடியவில்லை. இதனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை சென்றுள்ளார். 

அங்கு சென்ற அவரை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் அவரின் குழுவினர்கள் அவரை பொன்னாடை போர்த்தி வரவேற்றுள்ளனர். அதன்பின் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட அவர், நுவரெலியாவில் உள்ள சீதை அம்மன் ஆலயத்திற்கும் சென்று வழிபாடுகளில் ஈடுப்பட்டுள்ளார். 

நுவரெலியா கொட்டகலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள உழைப்பாளர் தின கூட்டத்தில் கலந்து கொள்ளும் அவர், மலையக தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார்.

அதன்பின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் இந்தியா வம்சாவளியை சேர்ந்த தமிழர்கள் மத்தியில் கலந்துரையாட உள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மத்திய அரசு மூலம் கட்டப்பட்டு வருகின்ற பத்தாயிரம் வீடு திட்டங்களையும் பார்வையிடவுள்ளார்.

மேலும் படிக்க | எலான் மஸ்கின் ஆட்குறைப்பு திட்டம்; அச்சத்தில் ட்விட்டர் பணியாளர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News