2017-ம் ஆண்டில் தமிழகத்தை அதிர வைத்த சம்பவங்கள்!!

  • Dec 29, 2017, 15:07 PM IST
1 /10

கடந்த டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்ற ஆர்.கே. நகர் இடைதேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 40707 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிப் பெற்றார். திமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தங்கள் டெப்பாசிட்டை இழந்தது.

2 /10

முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியான ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஓட்டுக்கு  வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது எனக் கூறி இடைதேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். மீண்டும் ஆர்.கே. நகர் இடைதேர்தல் டிசம்பர் 21-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 24-ம் தேதியும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

3 /10

2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக கனிமொழி, ராஜா மீது குற்றம்சாட்டப்பட்டு சிபிஐ விசாரணை நடத்தியது. கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி, ராஜா குற்றமற்றவர்கள் என டிசம்பர் மாதம் 21-ம் தேதி தீர்ப்பளித்தார் நீதிபதி ஷைனி.

4 /10

சென்னையில் நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தானிற்கு சென்ற மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் 4 தமிழக போலீசார் காயமடைந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

5 /10

நவம்பர் மாதம் இறுதியில் உருவான ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் பெரும் சேதம் அடைந்ததது. கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் கரைக்கு திரும்பவே இல்லை. பலர் புயலில் சிக்கி உயிரிழந்தனர். பல மீனவர்கள் காப்பாற்றப்பட்டனர். ஓகி புயலால் பல விவசாய நிலங்கள் பெரும் அளவுக்கு பாதிக்கப்பட்டது. இதனால் பல மீனவ குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து கடும் துயரத்திற்கு ஆளானார்கள்.

6 /10

கந்து வட்டி கொடுமைக்காரரிடம் இருந்து தங்களை காப்பாற்றும்படி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் இசக்கிமுத்து 6 முறை புகார் அளித்துள்ளார். ஆனால், பல மாதங்களாகியும் அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கடந்த அக்டோபர் 23-ம் தேதி நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பு கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட இசக்கி முத்து என்பவர் தான் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டார். கந்துவட்டி கொடுமையால் ஒரு குடும்பமே பலியான சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுத்தியது

7 /10

ஏழை குடும்பத்தை சேர்ந்த அரியலூர் மாணவி அனிதா +2 வில் 1176 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றும்,  நீட் தேர்வில்  மாணவி அனிதாவால் தேர்ச்சியடைய முடியவில்லை. மனமுடைந்த மாணவி அனிதா கடந்த செப்டம்பர் மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தமிழகமெங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

8 /10

காவிரி டெல்டா பகுதியில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் பிப்ரவரி மாதம் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் ஆரம்பமானது. இப்போராட்டம் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு பரவியது. இதனையடுத்து மக்களின் ஆதரவு இல்லாமல் இத்திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என மத்திய அரசு உறுதி அளித்தது. 

9 /10

சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணி அதிமுகவில் உருவானது. யார் தமிழக முதல்வாராக அமருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதனால் சசிகலா பெங்களூர் அக்ராஹர சிறையில் அடைக்கப்பட்டார்.

10 /10

ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கக் கோரி தமிழகத்தில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றன. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். ந்த போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என பல்வேறு தரப்பிலும் இருந்து ஆதரவு குவிந்தது. பின்னர் ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்கியது தமிழக அரசு.