ஐபிஎல்-ல் ஒரு போட்டியில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த 5 வீரர்கள்!

ஐபிஎல் 2021 பதிப்பில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த முதல் 5 பந்துவீச்சாளர்கள்.

  • Mar 19, 2022, 15:25 PM IST

ஐபிஎல் 2022 மார்ச் 26 முதல் தொடங்க உள்ளது.  தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்த்துப் விளையாட உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன.  ஐபிஎல் 2021 சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 4வது ஐபிஎல் பட்டத்தை வென்றது. போட்டியின் போது, ​​பல பந்துவீச்சாளர்கள் சிறப்பான ஸ்பெல்களை கொண்டு இருந்தனர்.  இருப்பினும், பந்துவீச்சாளர்கள் நிறைய ரன்களை வாரி வழங்கிய தருணங்களும் இருந்தது.  ஐபிஎல் 2021 இல் ஒரு போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த முதல் 5 பந்துவீச்சாளர்களைப் பற்றி பார்ப்போம்.

1 /5

லாக்கி பெர்குசன்- 56 இந்தப் பட்டியலில் லாக்கி பெர்குசன் 5வது இடத்தைப் பிடித்துள்ளார். ஃபெர்குசன் ஐபிஎல் 2021-ல் மிகச் சிறப்பாக பந்து வீசினாலும், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவர் தனது மேஜிக்கை வெளிப்படுத்தத் தவறிவிட்டார். ஐபிஎல் 2021 இறுதிப் போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் 4 ஓவரில் 56 ரன்களை வழங்கினார்.  சென்னை சூப்பர் கிங்ஸ் 192-3 ரன்களை எடுத்தது. இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து போட்டியின் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

2 /5

சாம் கர்ரன்- 56 இந்தப் பட்டியலில் சாம் கர்ரன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில், சாம் கரன் தனது 4 ஓவர்களில் 56 ரன்களை விட்டுக்கொடுத்தார், மேலும் எந்த விக்கெட்டையும் எடுக்கவிலை. முதலில் பேட்டிங் செய்த KKR 171-6 ரன்களை எடுத்தது. எனினும், இறுதியில் கேகேஆர் 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தது.

3 /5

சாம் கர்ரன்- 58 இன்னொரு முறையும் லீக் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 220-3 ரன்களை குவித்தது.  சாம் கர்ரன் 1 விக்கெட்டை எடுத்து, அவரது 4 ஓவரில் 58 ரன்களை விட்டு கொடுத்தார்.  KKR 202 ரன்களுக்கு ஆட்டமிழந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

4 /5

பாட் கம்மின்ஸ்- 58 இந்த பட்டியலில் பேட் கம்மின்ஸ் 2வது இடத்தை பிடித்துள்ளார். முன்பு குறிப்பிட்ட அதே KKR vs CSK போட்டியில், பாட் கம்மின்ஸ் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். தனது 4 ஓவர்களில் 58 ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட்டுகளின்றி இருந்தார்.  இதனால் CSK 220-3 ஐ அடிக்க முடிந்தது, பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

5 /5

லுங்கி என்கிடி- 62 லுங்கி என்கிடி ஐபிஎல் 2021-ன் போது ஒரு போட்டியில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தவர் இடத்தில் முதலில் உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது 4 ஓவர்களில் 62 ரன்கள் விட்டுக்கொடுத்தார். முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 218-4 ரன்கள் குவித்தது. பின்னர், மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.