கணவன் மனைவியிடம் சொல்லவே கூடாத 5 விஷயங்கள்

Relationship Tips : கணவன் மனைவி எவ்வளவு அன்யோன்யமாக இருந்தாலும், சில நேரங்களில் சில வார்த்தைகளை மனைவியிடம் கணவன் பயன்படுத்தவே கூடாது. அவை எவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Relationship Tips Tamil Latest : ’ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப தான் எப்போது ஒருவர் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். அது கணவன் மனைவியாகவே இருந்தாலும் சரி. பயன்படுத்தும் சொல் தவறாக இருந்தால் நிச்சயம் பிரிவு உறுதி. எனவே எப்படியான வார்த்தைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

 

1 /7

எந்தவொரு உறவிலும் எவ்வளவு அன்யோன்யமாக இருந்தாலும், சில நேரங்களில் தேவையில்லாமல் பயன்படுத்தும் ஒரு சொல் எத்தனை ஆண்டுகால பழக்கமாக இருந்தாலும், அந்த உறவை நொடியில் முடிவுக்கு கொண்டு வந்துவிடும். அத்தகைய ஆற்றல் சொற்களுக்கு உண்டு. குறிப்பாக கணவன் மனைவி எப்போதும் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும்.

2 /7

சில வார்த்தைகள் நெருக்கத்தை அதிகபடுத்தும் என்றாலும், சில வார்த்தைகள் பிரிவுக்கு வழிவகுத்துவிடும். நீங்கள் மனதளவில் நினைக்காமல் சொற்களை பயன்படுத்தினால் கூட அது ஏற்படுத்தும் விளைவுகள் மோசமானவையாக இருக்கும். கணவன் மனைவியை பார்த்து சொல்லும் இத்தகைய வார்த்தைகள் உறவுக்குள் நம்பிக்கையின்மையை விதைத்து, பிரிவுக்கு அழைத்துச் சென்றுவிடும்.

3 /7

1. ’ஒருபோதும்’ ’எப்போதும்’ -  இந்த வார்த்தைகளை கையாளும்போதும் மிகமிக கவனமாக இருக்க வேண்டும். மனைவியை திட்டும்போது இந்த இரு வார்த்தைகளையும் பயன்படுத்தினீர்கள் என்றால் அது அவர்களுக்கு மிகப்பெரிய சங்கடத்தையும், வலியையும் கொடுத்துவிடும். ஒருபோதும் செய்யவில்லை, எப்போதும் செய்ததே இல்லை என்ற சொற்கள் எல்லாம் இத்தனை நாட்களும் அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்ற அர்த்தத்தைக் கொடுத்து கணவன் மனைவி இருவருக்கும் இடையில் மிகப்பெரிய பிரிவை ஏற்படுத்திவிடும்

4 /7

2. உன்னால ஏன் முடியவில்லை? -  ஏதாவது வாக்குவாதத்தின்போது மனைவியை காயப்படுத்த வேண்டும் என்பதற்காக மற்றொருவருடன் ஒப்பிட்டு அவங்க செய்யும்போது உன்னால ஏன் முடியல, அவங்களே செய்யும்போது உன்னால செய்ய முடியாதா? என்ற கேள்விகளை கேட்கக்கூடாது. இந்த வார்த்தைகள் விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. மனைவியின் செயல்களை நேரடியாக மற்றொருவருடன் ஒப்பிட்டும் பேசுமளவுக்கு இருப்பதால் உடனடியாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரிவு வர வாய்ப்பு இருக்கிறது. 

5 /7

4. "நீங்கள் அதிகமாக செயல்படுகிறீர்கள்." -  நீ ரொம்ப ஓவரா பேசுற, நீ ரொம்ப ஓவரா போய்ட்டு இருக்கிற என்ற வார்த்தைகளையும் மனைவியின் கணவன் பயன்படுத்தக்கூடாது. மனைவியின் உணர்வுகளை சீண்டுவதற்காக கணவன் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளில் இதுவாக இருக்கிறது. கணவன் - மனைவி சண்டையின்போது இந்த வார்த்தைகளை நீங்கள் உபயோகிக்காதீர்கள்.

6 /7

4. "நீங்கள் அதிகமாக செயல்படுகிறீர்கள்." -  நீ ரொம்ப ஓவரா பேசுற, நீ ரொம்ப ஓவரா போய்ட்டு இருக்கிற என்ற வார்த்தைகளையும் மனைவியின் கணவன் பயன்படுத்தக்கூடாது. மனைவியின் உணர்வுகளை சீண்டுவதற்காக கணவன் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளில் இதுவாக இருக்கிறது. கணவன் - மனைவி சண்டையின்போது இந்த வார்த்தைகளை நீங்கள் உபயோகிக்காதீர்கள்.

7 /7

5. விவாகரத்து வேண்டும் -  சண்டையின்போது விவாகரத்து என்ற வார்த்தையை பயன்படுத்தவே கூடாது. இந்த வார்த்தை இருவருக்கும் இடையிலான உறவை அன்றோடு முடிவுக்கு கொண்டு வந்துவிடும். கோபத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தும்போது அதிக விளைவை ஏற்படுத்தும் அல்லது பிரிவை கொண்டு வரும் வார்த்தையாக இது அமைந்துவிடும். அதனால் தெரிந்தும்கூட இதை பயன்படுத்தாதீர்கள். கணவன் கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இது.