ரயில் பயணிகளே மிடில் பெர்த் விதி தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய 7 ரூல்ஸ்

ரயிலில் பயணம் செய்யக்கூடிய ஒவ்வொருவரும் தெரிஞ்சுக்க வேண்டிய 7 ரூல்ஸ் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

 

1 /7

அபாய சங்கலி:  ரயிலில் ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு சங்கிலி இருப்பதை பார்த்திருப்பீர்கள். அதன் பெயர் அபாய சங்கலி. அதனை அவசர நேரங்களில் பயணிகள் அதனை இழுத்து உதவியை பெற்றுக் கொள்ளலாம். மருத்துவ அவசரநிலை, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், விபத்து அல்லது குழந்தை, முதியவர்கள் அல்லது ஊனமுற்றோர் ஆகியோருக்கு ஏதேனும் உதவி தேவைப்படும்போது இழுக்கலாம். அநாவசியமாக சங்கிலியை இழுத்தது உறுதி செய்யப்பட்டால் அபராதம் கட்ட வேண்டும்.

2 /7

பயணத்தை நீட்டிக்கலாம்:  ரயில் பயணத்தில் இருக்கும்போதே உங்களின் பயணத்தை நீட்டித்துக் கொள்ள முடியும். சீசன்களில் உங்களுக்கு டிக்கெட் கிடைக்காவிட்டால், செல்லும் ஊருக்கு முன்பு இருக்கும் ஏதேனும் ஒரு டிக்கெட் இருந்து எடுத்து வைத்திருந்தீர்கள் என்றால் டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்து உங்களின் பயண தொலைவை உரிய கட்டணம் செலுத்தி நீட்டித்துக் கொள்ள முடியும். இருக்கைகளையும் டிக்கெட் பரிசோதகரின் உதவியுடன் மாற்றிக் கொள்ளலாம். 

3 /7

மிடில் பெர்த் விதி:  ரயிலில் முன்பதிவு செய்து உங்களுக்கு மிடில் பெர்த் கிடைத்துவிட்டால், இரவு 10 மணிக்கு மேல் தான் அதனை உபயோகப்படுத்த வேண்டும். அதற்கு முன்னதாக நீங்கள் படுக்க நினைத்தால் கீழ் பெர்த்தில் இருந்துக் கொண்டு தான் தூங்க வேண்டும். அதேபோல் காலை 6 மணிக்குள் எழுந்துவிட வேண்டும். அதன்பிறகு மிடில் பெர்த்தை பயன்படுத்தக்கூடாது. 

4 /7

ரயிலை தவறவிட்டால்:  முன்பதிவு செய்து இருந்தபோதும் அசல் போர்டிங் ஸ்டேஷனில் நீங்கள் ரயிலை தவறவிட்டால் அடுத்த இரண்டு நிறுத்தங்கள் வரை டிக்கெட் பரிசோதகர் உங்களின் இடத்தை வேறொருவருக்கு மாற்றிக் கொடுக்க முடியாது. நீங்கள் அடுத்த ஸ்டேஷனுக்கு வந்துகூட ரயிலைப் பிடித்து உங்களுக்கான இடத்தில் அமர்ந்து கொள்ளலாம். 

5 /7

பயணிகளுக்கு இடையூறு:  இரவு 10 மணிக்கு மேல் எந்த பயணிகளுக்கு உங்களாலும், மற்றவர்கள் உங்களுக்கும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது. அதேபோல் டிக்கெட் பரிசோதகர் கூட இரவு 10 மணிக்குள் டிக்கெட் பரிசோதனையை முடித்துக் கொள்ள வேண்டும். அதேபோல் அனைத்து விளக்குகளும் அனைக்கப்பட வேண்டும். 10 மணிக்கு மேல் சாப்பாடு கூட வழங்கப்படாது. 

6 /7

ரயில்வே நிர்வாகத்திடம் புகார்:  ரயிலில் பயணிக்கும்போது அதில் விற்பனை செய்யப்படும் சிற்றுண்டிகள் மற்றும் உணவுப் பொருட்கள் நியாயமான விலையை விட கூடுதலாக இருந்தால் நீங்கள் ரயில்வேவுக்கு புகார் அளிக்கலாம். அதேபோல் தரமற்ற உணவுகளை கொடுத்தாலும் நீங்கள் புகார் தெரிவிக்கலாம். அவர்களுக்கு அபராதமும், உங்களுக்கு உணவுக்கு செலுத்திய தொகையும் திரும்ப கிடைக்கும்.

7 /7

அதிக ஒலி எழுப்பக்கூடாது:  ரயிலில் நீங்கள் பயணிக்கும்போது அதிகம் சத்தம் உங்கள் மொபைல் அல்லது லேப்டாப்களில் இருந்துவரக்கூடாது. மற்ற பயணிகளுக்கு தொந்தரவாக இருப்பதாக அவர்கள் கருதினால் புகார் அளிக்கலாம். அதனால் ரயில் பயணத்தின்போது ஹெட்போன் பயன்படுத்துங்கள். மற்றவருடன் தொலைபேசியில் பேசும்போது, மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் உங்களின் குரல் சத்தம் இருக்க வேண்டும்.