கல்லீரலை பத்திரமா பாத்துக்கனுமா? ‘இதை’ மட்டும் சாப்பிடுங்க போதும்!

Foods That Will Protect You Liver Health: கல்லீரலை பாதுகாக்கும் சூப்பரான 6 உணவுகள்! இதை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள். 

உலகில் உள்ள 38 சதவிகிதம் பேர் கல்லீரல் கொழுப்பு பிரச்சனை காரணமாக அவதிப்படுவதாக ஒரு மருத்துவ ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இதற்கு ஆங்கிலத்தில் Fatty Liver என்று பெயருண்டு. நம் உடலில் பல்வேறு பகுதிகள் ஆரோக்கியமாக இயங்க காரணமாக இருப்பதே கல்லீரல்தான். அதை நாம் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டாமா? அப்படி, உங்கள் கல்லீரலை ஹெல்தியாக வைத்துக்கொள்ள உங்கள் டயட்டில் கண்டிப்பாக சில உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். அவை என்னென்ன தெரியுமா?

1 /7

நம் உடலின் முக்கியமான பாகங்களுள் ஒன்று, கல்லீரல். இது நச்சு நீக்கம், வளர்சிதை மாற்றம் மற்றும் எண்ணற்ற பிற செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. 500 க்கும் மேற்பட்ட முக்கிய செயல்பாடுகளுக்கு பொறுப்பான உங்கள் கல்லீரல், ஊட்டச்சத்து ஊக்கத்திற்கு உறுதுனையானது. அதன் ஆரோக்கியத்தை ஆதரிப்பதற்கான ஒரு முக்கிய வழி, சூப்பர்ஃபுட்களைக் கொண்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். 

2 /7

மஞ்சளை நாம் உணவில் சேர்த்துக்கொள்வதால் உடலில் ஏற்படும் அழற்சி எதிர்ப்புக்கு உறுதுணையாக இருக்கிறது. மேலும், இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் சத்துக்கள் உடலுக்கு ஊட்டச்சத்தினை அதிகரிக்கும். இதை எடுத்துக்கொள்வதால் கண்டிப்பாக உங்களது கல்லீரல் ஹெல்தியாக இருக்கும். 

3 /7

உடல் எடையை குறைப்பதற்காக பலர் கிரீன் டீயை குடிப்பதுண்டு. இதை தினசரி உட்கொண்டால் கண்டிப்பாக இதில் இது உடலில் ஏற்படும் வளர்ச்சிதை மாற்றத்தை தடுக்கும். இது, கல்லீரலுக்கும் நற்பலன்களை தரும் குணாதிசயங்களை கொண்டுள்ளது. 

4 /7

ஆரஞ்சு, லெமன், திராட்சை பழங்கள் உள்ளிட்ட பல, சிட்ரஸ் பழ வகைகளுள் அடங்கும். இந்த பழங்கள் கல்லீரலைத் தூண்டுவதன் மூலம் தண்ணீரால் உறிஞ்சக்கூடிய தீங்கு விளைவிக்கும் பொருட்களை செரிமானம் செய்ய உதவுகின்றன.

5 /7

சாதாரண காய்கறிகள் மட்டுமன்றி, இலை-தழைகளை கொண்ட காய்கறிகளையும் உங்களது உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இதை எடுத்துக்கொள்வதால் உடலில் உள்ள நச்சு வெளியேறி கல்லீரல் சரியாக அதன் வேலையை செய்ய உதவி செய்யலாம். 

6 /7

ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த உணவுகளை மருத்துவரின் பரிந்துரையுடன் எடுத்துக்கொளது கல்லீரலுக்கு நல்லது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். உங்கள் உணவில் ஒமேகா 3 நிறைந்த சுவையான மீன்களைச் சேர்ப்பது பொது ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உங்கள் கல்லீரலை வளர்க்கவும் ஒரு சிறந்த வழியாகும்.

7 /7

பீட்ரூட்டை உங்கள் டயட்டில் சேர்ப்பதன் மூலம் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க முடியும். பீட்ரூட்டில் பீடைன் என்ற சத்து உள்ளது. இது, கல்லீரல் அதற்குள் இருக்கும் நச்சினை வெளியேற்ற உதவுகிறது. இதனை சாலட், ஸ்மூதிஸ், காய்கறி பொரியல் என பல வகைகளில் உட்கொள்ளலாம்.