மத்திய அரசு ஊழியர்களுக்கு தேர்தலுக்கு முன் தீபாவளி? காத்திருக்கும் குட் நியூஸ்

7th Pay Commission: மக்களவை தேர்தலுக்கு முன்னதாக 1 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும்  ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைக்கவுள்ளது. 

தொழிலாளர் துறையால் வெளியிடப்பட்ட ஏஐசிபிஐ குறியீட்டின் (AICPI Index) அரையாண்டு தரவுக்குப் பிறகு, மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி மார்ச் மாதத்தில் மீண்டும் 4% அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு ஹோலிக்கு முன் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என கூறப்படுகின்றது.

1 /7

மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்த அறிவிப்பு விரைவில் வரவுள்ளது. ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய தெளிவு தற்போது கிடைத்துள்ளது.

2 /7

சமீபத்தில் வெளிவந்த டிசம்பர் மாத ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் 2024 ஜனவரி முதல் ஊழியர்களின் அகவிலைப்படியும் (Dearness Allowance) ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணமும் 4% அதிகரிக்கும் என்பது தெளிவாகியுள்ளது. இதன் பிறகு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 50% ஆக உயரும். 

3 /7

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி / அகவிலை நிவாரணத்தின் விகிதங்களை ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசு திருத்துகிறது. தொழிலாளர் அமைச்சகம் வெளியிடும் அரையாண்டுத் தரவைப் பொறுத்து இதில் திருத்தம் செய்யப்படுகின்றது.

4 /7

அகவிலைப்படி அதிகரிப்பு குறித்த அறிவிப்பு மார்ச் மாதம் வரும் என கூறப்படுகின்றது. தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துவிட்டால், அதன் பிறகு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும். ஆகையால், அதற்கு முன்னர் இந்த அறிவிப்பு வெளியாகும்.  

5 /7

மார்ச் மாதம் டிஏ ஹைக் பற்றி அறிவிக்கப்பட்டால், ஊழியர்கள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத அகவிலைப்படி உயர்வின் அரியர் தொகையையும் சேர்த்து மார்ச் மாத சம்பளத்துடன் பெறுவார்கள். இதனால் அவர்களது மார்ச் மாத ஊதியத்தில் பம்பர் வருமானம் இருக்கும். 

6 /7

அகவிலைப்படு 50% -ஐ எட்டினால் சம்பள திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. ஆகையால், இந்த அறிவிப்பு வந்தவுடன் ஊழியர்களுக்கு ஊதிய திருத்தமும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

7 /7

அகவிலைப்படி 50 சதவிகிதத்தை எட்டினால், அதன் பிறகு அகவிலைப்படி பூஜ்ஜியமாக்கப்பட்டு, அதன் தொகை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும். அதன் பிறகு ஊழியர்களின் அடிப்படை ஊதியமும் மிகப்பெரிய ஏற்றத்தை காணும்.