விஜய்யிடம் இத்தனை ஆடம்பரமான கார்கள் உள்ளதா!

கடந்த ஆண்டு விஜயின் 'மாஸ்டர்' படம் ஹிட் அடித்த நிலையில் இந்தாண்டு 'பீஸ்ட்' படம் பட்டையை கிளப்ப விருக்கிறது.

 

1 /4

நடிகர் விஜய் கடற்கரையோரத்தில் ஆடம்பரமான பங்களா, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மற்றும் இன்னும் பிற ஆடம்பரமான பொருட்களுக்கு சொந்தக்காரர் ஆவார்.  அமெரிக்க நடிகர் டாம் க்ரூஸின் கடற்கரை வீடால் ஈர்க்கப்பட்டவர், சென்னையில் கடற்கரையோரத்தில் சிறந்த கட்டுமான கலைகளுடன், அழகிய வேலைப்பாடுகளுடன் ஒரு சொகுசான பங்களாவை காட்டியுள்ளார்.  

2 /4

2019ல் வெளியான தகவல்களின்படி, திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்கள் வாயிலாக விஜய் வருடத்திற்கு 100 முதல் 120 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் சில முன்னணி பிராண்டுகளுக்கு முகமாக திகழ்வதன் மூலம் வருடத்திற்கு 10 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்.  

3 /4

தென்னிந்திய திரையுலகில் குறைந்த நடிகர்களே ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் வைத்துள்ள நிலையில் நடிகர் விஜய் சொந்தமாக வைத்திருக்கிறார், இதன் விலை 2.5 கோடி ரூபாய் ஆகும்.  மேலும் இவர் 2 பிஎம்டபுள்யூ எஸ்யூவி, 65 லட்சம் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் எவோக், 74 லட்சம் மதிப்புள்ள ஃபோர்ட் மஸ்டாங், 87 லட்சம் மதிப்புள்ள வோல்வோ எக்ஸ்சி 90 மற்றும் 87 லட்சம் மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ் ஜிஎல்ஏ ஆகியவற்றை வைத்திருக்கிறார்.  

4 /4

நடிகர் விஜய் அதிகமாக போக்குவரத்துக்கு பயன்படுத்துவது ஆடி ஆ8 கார் ஆகும்.  இந்த ஆடம்பரமான காரின் விலை 1.17 கோடி ரூபாய் ஆகும்.  மேலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்த ரஜினிகாந்தை இவர் பின்னுக்கு தள்ளியுள்ளார்.  தர்பார் படத்திற்கு நடிகர் ராஜின் 90 கோடி ருபாய் வாங்கிய நிலையில் இவர் தற்போது பீஸ்ட் படத்திற்காக 100 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளார்.