திருவண்ணாமலையில் 14 கிலோமீட்டர் கிரிவலம் செய்த நடிகை ஆத்மிகா!

Actress Aathmika: தனது பிறந்த நாளை ஒட்டி 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவல பாதையில் இரவு நேரத்தில் கிரிவலம் வந்த நடிகை ஆத்மிகா.

 

1 /5

மீசைய முறுக்கு, கோடியில் ஒருவன், காட்டேரி, கண்ணை நம்பாதே, திருவின் குரல் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ஆத்மிகா தனது பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்டார்.  

2 /5

தனது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று இரவு திருவண்ணாமலையில் 14 கிமீ தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்க திருக்கோவிலில் தரிசனம் செய்து கிரிவலம் மேற்கொண்டார்.   

3 /5

திருநேர் அண்ணாமலையார் திருக்கோவிலில், பழனி ஆண்டவர் திருக்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கற்பூரம் ஏற்றி வழிபட்ட அவர் வழிநெடுகிலும் நமசிவாய மந்திரத்தை ஓதியபடி கிரிவலம் மேற்கொண்டார்.  

4 /5

நெற்றியில் பட்டை வைத்துக்கொண்டு கிரிவலப் பாதையில் பல்வேறு திருக்கோவிலில் கற்பூரமேற்றி வழிபட்டார். தற்பொழுது நடிகர் அரவிந்த்சாமியுடன் நரகாசுரன் என்ற படத்தில் ஆத்மிகா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.  

5 /5

முன்னதாக இன்று மாலை அண்ணாமலையார் திருக்கோவில் நடிகை ஆத்மிகா சாமி தரிசனம் செய்தார்.