Aparna Das : திருமண கொண்டாட்டத்தில் அபர்ணா தாஸ்! வைரல் புகைப்படங்கள்..

Aparna Das Wedding Latest Photos : தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர், அபர்ணா தாஸ். இவருக்கு மலையாள நடிகர் ஒருவருடன் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இவர்களின் திருமண செலிப்ரேஷன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Aparna Das Wedding Latest Photos : மலையாள படங்களில் நடித்தாலும் தமிழ் திரையுலகில் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகை, அபர்ணா தாஸ். இவர், விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்து பிரபலமானார். கடந்த ஆண்டு இவர் நாயகியாக நடித்திருந்த ‘டாடா’ திரைப்படம் மிகப்பெறிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, இவருக்கு பட வாய்ப்புகளும் பெருகியது. இந்த நிலையில், இவர் மலையாள நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இந்த திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. 

1 /7

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் அபர்ணா தாஸ். இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. 

2 /7

இவர், மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்பொல் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். 

3 /7

2 வாரங்களுக்கு முன்பு அபர்ணா தாஸிற்கும் தீபக்கிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்ற நிலையில், இவர்களுக்கு திருமணம் விரைவில் நடக்க இருக்கிறது. 

4 /7

தற்போது அபர்ணா தாஸிற்கு ஹல்தி செலிப்ரேஷன் நடந்து முடிந்துள்ளது. இந்த நலங்கு நிகழ்ச்சியை மிக மகிழ்ச்சியாக கொண்டாடியிருக்கிறார் அபர்ணா.

5 /7

அபர்ணா தாஸ், தமிழில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்தை அடுத்து, டாடா படத்தில் நாயகியாக நடித்திருந்தார். 

6 /7

அபர்ணா தாஸிற்கு மலையாளத்திலும் பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இவர், தனது முதல் படத்தில் தீபக் பரம்பொலுடன் சேர்ந்து நடித்தார். இதிலிருந்துதான் இவர்களுக்குள் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. 

7 /7

அபர்ணா தாஸின் திருமண வைபோக புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.