ஏர்டெல் வாடிக்கையாளர்களே! போஸ்ட்பெய்டில் இருந்து ப்ரீப்பெய்டுக்கு மாறுவது எப்படி?

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் போஸ்ட்பெய்ட் பயன்படுத்திக் கொண்டிருந்தால் நீங்கள் இனி ப்ரீப்பெய்டுக்கு ஈஸியாக மாறிக் கொள்ளலாம்.

 

1 /6

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனத்தில் போஸ்ட்பெய்ட் மற்றும் ப்ரீப்பெய்ட் சேவைகள் கொடுக்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் விரும்பும் சேவையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதேநேரத்தில் எந்த சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும், ஒன்றில் இருந்து இன்னொரு சேவைக்கும் மாற்றிக் கொள்ளலாம். போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் ப்ரீப்பெய்ட் சேவைக்கும், ப்ரீப்பெய்ட் வாடிக்கையாளர்கள் போஸ்ட்பெய்டுக்கும் மாறிக்கொள்ள முடியும்.

2 /6

அதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன. ஒருவேளை ஏர்டெல் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் ப்ரீப்பெய்ட் திட்டத்துக்கு மாற விரும்பினால், எப்படி மாறலாம் என்பதை தெரிந்து கொள்வோம். முதலில், போஸ்ட்பெய்டில் இருந்து ப்ரீபெய்டு இணைப்பிற்கு மாற ஏர்டெல் ஸ்டோர் லொக்கேட்டர் பக்கத்தைப் பயன்படுத்தி, உங்களுக்கு அருகிலுள்ள ஏர்டெல் ஸ்டோரை கண்டறியவும்.

3 /6

நீங்கள் செல்வதற்கு முன், உங்கள் தொலைபேசியில் ஏர்டெல் போஸ்ட்பெய்டு சிம் மற்றும் ஐ.டி  proof இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் அங்கு சென்றதும் அங்குள்ள நிர்வாகியிடம் பேசி, உங்கள்  இணைப்பை போஸ்ட்பெய்டில் இருந்து ப்ரீபெய்டுக்கு மாற்ற விரும்புகிறீர்கள் என்று சொல்லுங்கள்.

4 /6

நிர்வாகி  ‘போஸ்ட்பெய்டு டூ ப்ரீபெய்டு இடம்பெயர்வு படிவம்’  கொடுப்பார். நீங்கள் அதைப் பெற்றவுடன், தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பவும். நிர்வாகி விவரங்களை சரிபார்ப்பார். அதற்கு முன் போஸ்பெய்ட் திட்டத்தில் நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணம் ஏதும் இருந்தால் அதை செலுத்த வேண்டும். 

5 /6

இதன் பின் நிர்வாகி ப்ராசஸ் செய்து உங்கள் போனிற்கு ஓ.டி.பி ஒன்றை அனுப்புவார். அதை அவரிடம் தெரிவிக்க வேண்டும். அதன் பின் உங்கள் நம்பர் ப்ரீபெய்ட் திட்டத்திற்கு மாற்றப்படும். 2 மணி நேரம் கழித்து உங்கள் சிம் ஆக்டிவேட் செய்யப்படும். அதன் பின் தொடர்ந்து பயன்படுத்த ப்ரீபெய்ட் திட்டத்திற்கான ரீசார்ஜ் செய்ய வேண்டும். 

6 /6

இவ்வாறு செய்யும் போது உங்கள் போஸ்ட்பெய்ட் டேட்டா இன்வேலிட் ஆகும்.  இருப்பினும், டாக்டைம் பேலன்ஜை திரும்ப பெறலாம். அதற்கு உங்கள் தொலைபேசியிலிருந்து *141# ஐ டயல் செய்து, மெனுவிலிருந்து ‘Share Talk time’ ஆப்ஷனை தேர்ந்தெடுத்து 1-ஐ அழுத்தி மீதமுள்ள கட்டணத்தை பெற்றுக் கொள்ளலாம்