Airtel 5G Plans: ஏர்டெல் வழங்கும் அசத்தலான ‘சில’ 5G திட்டங்கள்!

Airtel's Top 5G Plans: ஏர்டெல் 2023 டிசம்பர் மாதத்திற்குள் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் 5G சேவையைத் தொடங்க விரும்புகிறது. இதுவரை 300க்கும் மேற்பட்ட நகரங்களில் 5G சேவை கிடைக்கிறது.

ஏர்டெல் 2023 டிசம்பர் மாதத்திற்குள் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் 5G சேவையைத் தொடங்க விரும்புகிறது. இதுவரை 300க்கும் மேற்பட்ட நகரங்களில் ஏர்டெல் டெலிகாம் ஆபரேட்டர் வழங்கும் 5G நெட்வொர்க்கை பயன்படுத்த முடியும். வரும் வாரத்தில் பல நகரங்களில் 5ஜி சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது.

 

1 /6

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் 5G சேவை சில ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களுடன் கிடைக்கிறது. ஏர்டெல்லின் இந்த திட்டங்களில் இலவசமாக Amazon Prime மற்றும் Disney + Hotstar சந்தா சேவைகள் கிடைக்கின்றன. இந்த திட்டங்களை பற்றி தெரிந்து கொள்வோம்...

2 /6

ஏர்டெல்லின் ரூ.499 திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது, இதில் 5ஜி இணையத்துடன் தினமும் இலவச 100 எஸ்எம்எஸ்கள் அனுப்பலான். இது தவிர, 3 மாத டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா திட்டத்தில் கிடைக்கிறது. அதே நேரத்தில், Xtream பயன்பாட்டின் பலன்களும் திட்டத்துடன் கிடைக்கும். இதுவரை 5ஜி பெறாத பயனர்கள் வரம்பற்ற 4ஜி டேட்டாவுடன் தினசரி 3ஜிபி டேட்டா கேப் கிடைக்கும்.

3 /6

ஏர்டெல்லின் ரூ.839 திட்டமானது 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இதில் வரம்பற்ற 5ஜி இணைய டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் தினமும் கிடைக்கும். மேலே உள்ள திட்டத்தைப் போலவே, இந்த திட்டத்தில் 3 மாத டிஸ்னி + ஹாட்ஸ்டார் இலவச சந்தாவும் கிடைக்கிறது. இது வரை 5G சேவை நெட்வொர்ட்  பெற முடியாத இடங்களில் இருப்பவர்களுக்கு இந்த திட்டம் சிறந்தது. இந்த திட்டம் தினசரி 2ஜிபி வரம்பற்ற 4ஜி டேட்டாவை வழங்குகிறது.

4 /6

ஏர்டெல்லின் ரூ.3359 திட்டம் ஒரு வருட வேலிடிட்டியுடன் வருகிறது. இதில் வரம்பற்ற 5ஜி டேட்டா, அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா திட்டத்தில் ஒரு வருடத்திற்கு கிடைக்கும். இது தவிர, Apollo 24x7 நன்மைகள், Wynk சந்தா மற்றும் பல இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.  

5 /6

ஏர்டெல்லின் ரூ.699 திட்டமானது 56 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இதில் வரம்பற்ற 5ஜி டேட்டா, அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இந்த திட்டத்தில், Amazon Prime சந்தா 56 நாட்களுக்கு கிடைக்கும். பயனர்கள் 5G நெட்வொர்க் பகுதியில் இல்லை என்றால், அவர்கள் 3GB தேதி வரம்புடன் வரம்பற்ற 4G டேட்டாவைப் பெறுவார்கள்.

6 /6

ஏர்டெல்லின் ரூ.999 திட்டமானது 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இதில் வரம்பற்ற அழைப்பு மற்றும் வரம்பற்ற 5ஜி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் தினமும் கிடைக்கும். அமேசான் பிரைம் உறுப்பினர் திட்டத்தில் 84 நாட்களுக்கு கிடைக்கும். ஏர்டெல் 5ஜி நகரத்தில் இல்லாத பயனர்கள் தினசரி 2.5ஜிபி டேட்டா வரம்பில் வரம்பற்ற 4ஜி டேட்டாவைப் பயன்படுத்தலாம்.